ஆரணியாற்று கரை உடைப்பு: கிராமம் மூழ்கியது

Subscribe to Oneindia Tamil

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆரணியாற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்துவெள்ள நீர் புகுந்து பெரும்பேடு குப்பம் என்ற கிராமம் அடியோடு மூழ்கியது.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் என்ற இடத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்துவிநாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது. இந்த நீர் தற்போது ஆரணியாற்றில் கலந்துவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றங்கரையில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச்செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தஎச்சரிக்கையைத் தொடர்ந்து வெளியேறினர்.

பல கிராமத்தினரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். இந்த நிலையில் ஆரணியாற்று கரையில்உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெரும்பேடு குப்பம் என்ற கிராமத்தில், ஆற்று நீர் காட்டாற்று வெள்ளமாகபுகுந்தது.

இதன் காரணமாக கிராமமே நீரில் மூழ்கியது. ஆனால் வெள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து கிராம மக்கள்அத்தனை பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

இக்கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. பயிர்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+