லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது
பரமத்திவேலூர்:
லஞ்சம் வாங்கியதாக பரமத்திவேலூர் டிஎஸ்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுனையான் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் நில பிரச்சினை இருந்தது. இது குறித்து பரமத்திவேலூரில் சண்முகம் புகார் செய்தார்.ஆனால் அவரது நிலப்பிரச்சினை குறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவேபரமத்திவேலூர் டிஎஸ்பி தினகரனை சண்முகம் சென்று பார்த்தார்.
அப்போது டிஎஸ்பி தினகரன் நிலப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினாராம். ஆனால் அதற்கு ரூ. 15,000 தனக்கு லஞ்சமாகதரவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே சண்முகம் முதல் தவணையாக ரூ.10,000 டிஎஸ்பியிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகுமீதீ ரூ. 5,000 விரைவில் தந்து விடுவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் டிஎஸ்பி லஞ்சம் கேட்ட விவரத்தை அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் சண்முகம் கூறியுள்ளார்.அப்போது டிஎஸ்பியை கையும், களவுமாக பிடிப்பது என்று முடிவு செய்தனர்.
இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு வழக்கறிஞர் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு பரம்த்திவேலூரில்உள்ள ஜப்பான் பியூட்டி கடையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிகள் பன்னீர்செல்வம், பெரியசாமி மற்றும் போலீசார் மற்றும் போலீசார்மறைந்து இருந்தனர்.
அப்போது லஞ்ச பணம் ரூ.5,000த்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி விவசாயி சண்முகம் டிஎஸ்பி தினகரனுக்கு தொலைபேசிமூலம் தகவல் கொடுத்தார். தனக்கு பொறி வைக்கப்பட்டிருப்பதை அறியாத டிஎஸ்பி தினகரன் அந்த அடைக்கு வந்து விவசாயிசண்முகத்திடம் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தினகரனை கைது செய்தது குறித்து டிஜிபிக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்கிருஷ்ணபிள்ளை அறிக்கை சமர்ப்பித்தார். எனவே டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications