நகை மோசடி வழக்கு: ஜெயலட்சுமி மீண்டும் கைது
மதுரை:
போலீஸ் அதிகாரிகள் மீது செக்ஸ் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி சிறையில் மீண்டும்கைது செய்யப்பட்டார்.
ஜெயலட்சுமி டிஎஸ்பி ராஜசேகர் மனைவி தற்கொலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் முருகவேலிடம் 73 பவுன் நகைவாங்கியதாகவும் அதில் ரூ. 3 லட்சம் கடன் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.இந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கிலும், முருகவேல்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே மதுரை எஸ்எஸ் காலனி போலீசில் ஜெயலட்சுமி மீது முருகவேல் நகை மோசடி வழக்குதொடர்ந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தி வந்ததால் இந்த வழக்கு கிடப்பில்போடப்பட்டது.
இதற்கிடையே ஜெயலட்சுமி மீதான நகை மோசடி வழக்கில் மதுரை 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் சந்திரசேகரன் இந்த வழக்கில் ஜெயலட்சுமியை கைதுசெய்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார்.
இதனால் எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் திருச்சி சிறைக்கு சென்று ஜெயலட்சுமியிடம் நகை மோசடி வழக்கில்கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கூறி அதற்கான ஆவணங்களில் கையெழுத்தையும் பெற்றார்.
இந்த ஆவணங்கள் மதுரை 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயலட்சுமியை நகைமோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பிக்ககோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications