ஜெயலலிதா மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றுப் பாலம் இடிந்தது தொடர்பாக வேண்டும் என்றே முதல்வர் ஜெயலலிதா தன் மீது விசாரணைக்கமிஷன் அமைக்கப் போவதாக மிரட்டியுள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றின் மீது கடந்த திமுக ஆட்சியின் போது மேம்பாலம் கட்டப்பட்டது. கரூர் நகரபோக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்கி வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி, கடந்த மழை வெள்ளத்தின்போது இடிந்தது.இதனால் இப்பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை சமீபத்தில் நேரில்சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சிக்காலத்தின் போது பல கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம்இடிந்து விழுந்துள்ளதால், பாலம் முறைப்படி கட்டப்பட்டதா, இதில் ஊழல் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், மழை, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நான்பலமுறை செய்தியாளர்களிடம் பேசும்போது அரசின் பணிகளைக் குறை கூறாமல் அரசியல் நிர்வாகம் காத்தேன்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, என்னையும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்துக் கருத்துக்களைத்தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப் பாலத்தின் பெரும் பகுதி நொறுங்கி விட்டது,
எனவே இதில் ஊழல் நடந்ததா என்பது குறித்து ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.உண்மையில் அந்தப் பாலம் அரசின் செலவில் கட்டப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் தான்அப்பாலத்தைக் கட்டியது.
பாலம் பலவீனமடைந்த போதெல்லாம் அதைப் பராமரிக்க அந்தத் தனியார் நிறுவனம் முயன்றபோதெல்லாம், ஆட்சித் தலைவர்பராமரிப்புப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளார். என் மீது விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றஉள்நோக்கத்துடனேயே பாலத்தில் போக்குவரத்து மறுக்கப்பட்டு பாலம் மூடப்பட்டுள்ளது.
உண்மையில் உடைந்தது பாலமா அல்லது அரசால் மணல் கொட்டி அமைக்கப்பட்ட சாலையா என்பதை ஜெயலலிதா விளக்கவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications