கிருஷ்ணசாமி மீது கொலை வழக்கு
சென்னை:
புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்களுக்கும், இந்த கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியவரின் ஆதரவாளர்களுக்கும்இடையே நடந்த கோஷ்டி தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திரிசூலத்தில் கல்குவாரிகள் நிறைய உள்ளன. கல்குவாரிளை நடத்துவதில் புதிய தமிழகம் கட்சியினருக்குஇடையே மோதல் இருந்து வந்தது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர் கரும்பசாமிக்கும் அந்தகட்சியில் இருந்து விலகி போட்டி கட்சி தொடங்கிய தங்கபாண்டியனுக்கும் கல்குவாரி நடத்துவதில் போட்டி ஏற்பட்டது.இதனால் 6 மாதமாக அங்கு கல்குவாரி பணி நடக்கவில்லை. நேற்று முன்தினம் தங்பாண்டியன் பூஜை போட்டு கல்குவாரிவெட்டி எடுக்கும் பணியை தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி கோஷ்டியினர் தகராறில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பல்லாவரம் போலீசார் கல்குவாரியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். கல் உடைக்க கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றினர்.
இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் திரிசூலம் ஊருக்குள் புகுந்துரகளையில் ஈடுபட்டுள்ளனர். தங்க பாண்டியனின் ஆதரவாளர்கள் வேளாங்கன்னி வீட்டை அடித்து நொறுக்கினார்கள். ராஜா,சுரேஷ் ஆகியோரை தாக்கினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த மாடசாமி (வயது 38) என்பவர் ரவுடிகளை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்தவன்முறை கும்பல் மாடசாமியை சரமாரியாக வெட்டியது. அவர் உயிருக்கு பயந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டினார்கள்.மாடசாமி அங்குள்ள கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தார்.
ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்தனர். அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பலியானார். இந்த தகவல்கிடைத்ததும் தங்கபாண்டியன் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். கிருஷ்ணசாமியின் ஆதாவாளர்களை தாக்க திரிசூலம்ஊருக்குள் புகுந்தனர். கிருஷ்ணசாமி ஆதரவாளர்களின் வீடுகளை சூறையாடினார்கள்.
இந்த கோஷ்டி பூசலினால் பதட்டம் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே கொலைசெய்யப்பட்ட மாடசாமியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசாரிடம் கூறினர்.
பிறகு மாடசாமி கொலை தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணசாமியை 8வதுகுற்றவாளியாக சேர்த்தனர்.
இந்த கொலை தொடர்பாக சுடலை, வேம்புலி ஆகிய 2 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். கொலைசெய்யப்பட்ட மாடசாமி புதிய தமிழகம் கட்சிக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியின் தீவிர ஆதரவாளர். இவரது சொந்த ஊர்நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் என்பது தெரியவந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications