வீரப்பன் வழக்கு: கொளத்தூர் மணி விடுதலை
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்பு இருப்பதாக கூறி தமிழக போலீஸார் தொடர்ந்த வழக்கிலிருந்து கொளத்தூர் மணியை,மேட்டூர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2001ம் ஆண்டு ஊட்டியில் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வீரப்பன் இலங்கைக்கோஅல்லது வேறு எங்குமோ தப்பிச் செல்லவில்லை.
காட்டில் தான் இருக்கிறான் என்று தெரிவித்தார். இதையடுத்து மணிக்கும், வீரப்பனுக்கும் தொடர்பு உள்ளது, அவர் வீரப்பனுக்குஉதவுகிறார் என்று கூறி கியூ பிரிவு போலீஸார் மேட்டூர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. கொளத்தூர் மணி மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறிஇந்த வழக்கிலிருந்து மணியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications