நெருங்கும் புயல்: இப்போது 800 கி.மீ. தொலைவில்...!
சென்னை:
![]() |
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது.இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி சென்னைக்கு 800 கி.மீ. தொலைவில் இந்தப் புயல்நிலை கொண்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 3 புயல் சின்னங்கள் உருவாகி சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களை மழை புரட்டிப் போட்டது.வெள்ளக் காடாகிய மாவட்டங்கள் இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் அந்தமானுக்கு அருகே சென்னையிலிருந்து சுமார் 2,000 கி.மீ. தொலைவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 3நாட்களுக்கு முன்பு உருவானது.
இது இப்போது வலுவடைந்து புயல் சின்னமாக மாறி தமிழகக் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்றிரவு சென்னைக்கு1,000 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்த இந்தப் புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் 800 கி.மீ.தூரத்தை அடைந்துவிட்டது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனத்த மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.இந்த புயல் சின்னத்தின் நகர்வை அமெரிக்க கடற்படையும் தனது செயற்கைக் கோள்கள், ரேடார்கள் மூலம் துல்லியமாகக்கணித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை இந்தப் புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கும். இதனால் சென்னைஉள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இப்போதைய போக்கிலே நகர்ந்துவந்தால் வெள்ளிக்கிழமை அது வட தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமைமுதல் தொடர்ந்து கன மழை பெய்யும்.
இதையடுத்து மீண்டும் வெள்ள நிலைமையை சமாளிக்க மாநில அரசு தயாராகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications