வெள்ளத்துக்கு இதுவரை பலி 351 !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 351 பேர் வரை பலியாகியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த வட கிழக்குப் பருவ மழை வரலாறு காணாத அளவுக்கு படு தீவிரமாக உள்ளது.அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தை வெள்ளக்காடாக்கி உள்ளது. கிட்டத்தட்ட 15 மாவட்டங்கள் கன மழையால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் மழை மற்றும் ஏரி, குளம் உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால், இதுவரை தமிழகத்தில் 351 பேர்பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் வெள்ளத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர்உயிரிழந்த காரணத்தால்தான் மழை வெள்ளச் சாவு அதிகரித்து விட்டதற்கு முக்கியக் காரணம்.












Click it and Unblock the Notifications