தமிழர்களும் இந்தியர்கள் தான்: ஜெ. சூடு
சென்னை:
வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால்இந்த விஷயம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
சென்னைப் புறநகர்ப் பகுதிகளான பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கணி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்குசென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் சந்தித்த ஜெயலலிதா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் மறைமுகமாக அதிருப்திவெளியிட்டார்.
ஜெயலலிதா கூறுகையில், வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு இதுவரை 3 அறிக்கைகளை தமிழக அரசுஅனுப்பியுள்ளது. அதில் மொத்தமாக ரூ. 13,682 கோடி நிதி, இரண்டரை லட்சம் டன் அரிசி, 43,200 கிலோ லிட்டர்மண்ணெண்ணை ஆகியவற்றை ஒதுக்கக் கோரியுள்ளோம்.
ஆனால் மத்திய அரசு இதுவரை ரூ. 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. வெள்ள நிவாரணம் தொடர்பாக தொலைபேசியில்என்னுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசியபோதும், இந்த 3 அறிக்கைகள் குறித்து விளக்கினேன்.
மத்திய அரசிடமிருந்து மட்டுமே தமிழக அரசு நிவாரண நிதியைக் கோரியுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து கோரவில்லை.தமிழகம், இந்தியாவில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களும் இந்தியர்கள்தான். எனவே நிவாரண உதவி தொடர்பாகதேவைப்பட்டால் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
பள்ளிக்கரணையில், சதுப்பு நிலம் அதிகம் உள்ள பகுதியில்தான் அதிக அளவில் நீர் தேங்குகிறது. இதன் காரணமாகவேமடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகஅளவில் வெள்ள நீர் புகுந்துவிடுகிறது.
இந்தப் பகுதிகளுக்குள் நுழையும் நீர் அங்கிருந்துபக்கிங்காம் கால்வாய்க்கு சென்று விழுகிறது. பக்கிங்காம் கால்வாயிலிருந்துஇந்த நீர் கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் பக்கிங்காம் கால்வாய், இந்த அளவுக்கு அதிக நீரை கடலுக்கு கொண்டு செல்லமுடியாத காரணத்தால்தான் துரைப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துசேதத்தை அதிகப்படுத்தியுள்ளது.
எனவே பக்கிங்காம் கால்வாயிலிருந்து கடலுக்கு நீரை நேரடியாக கொண்டு செல்ல ஒக்கியம் மடுவு என்ற இடத்திலிருந்துநேரடியாக ஒரு புதிய கால்வாயை அமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது என்றார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications