செளதி: கேரள வாலிபரின் கண்கள் தப்புமா?
திருவனந்தபுரம்:
செளதி அரேபிய சிறையில் இருக்கும் கேரள வாலிபரின் கண்களைக் குருடாக்குமாறு அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அந்த வாலிபரை பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும் என கேரள முதல்லவர் உம்மன்சாண்டி கோரியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஏரம்வல்லக்குழி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் நவ்ஷத் (வயது 34). இவர்செளதியில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். பெட்ரோல் பங்கிற்கு வந்த அரேபியர் ஒருவர் மோட்டார் பேட்டரிசார்ஜ்ஜர் ஒன்றை இவரிடம் வாங்கிச் சென்றார்.வீட்டிற்கு சென்று அதை போட்டு பார்த்த போது அது சரியாக இயங்கவில்லை. இதனால் அவர் அதை பெட்ரோல் பங்கில்திரும்பக் கொடுத்து புகார் கூறினார். கொடுக்கும் போது பரிசோதித்து பார்த்து தானே வாங்கினீர்கள் என்று நவ்ஷத் கூறியிள்ளார்.இதனால் வாய்த்தகராறு முற்றி இருவரும் மோதிக் கொண்டனர்.
இதில் அரபு இளைஞரின் கண்ணில் காயம் ஏற்பட்டு அவரின் கண் பார்வை பறிபோனது. இது தொடர்பாக நவ்ஷத்தை அரேபியபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரபு இளைஞரின் கண்ணை காயப்படுத்தி குருடாக்கியகேரள வாலிபருக்கு அவரது வலது கண்ணை தோண்டி எடுத்து தரும்படி அரபு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த கொடூர தீர்ப்பால் நவ்ஷத் அதிர்ச்சி அடைந்துள்ளார். செளதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் நவ்ஷதுக்கு மன்னிப்புஅளித்து விடுதலை செய்யும்படி மன்னரை கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் மறுத்து விட்டதால் தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியச் சட்டப்படி பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மட்டுமே குற்றம் செய்தவர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.மேலும் பாதிக்கப்பட்ட அரேபிய இளைஞருக்கு பெட்ரோல் பங்க் முதலாளி ரூ. 12 லட்சம் நஷ்டஈடாக தந்ததையும் அந்தஇளைஞர் ஏற்க மறுத்துள்ளார்.
இதற்கிடையே செளதி சிறையில் இருக்கும் கேரள வாலிபரின் தண்டனை விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டுஅவருக்கு விடுதலை பெற்று தர வேண்டும் என்று கோரி கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications