கிருஷ்ணசாமியைக் கைது செய்யக் கோரி வழக்கு
சென்னை:
கொலை வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கைது செய்துவிசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் கல் குவாரியில் வேலை பார்த்து வந்த மாடசாமி (நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்) ஓரிரு தினங்களுக்கு முன்பு சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.புதிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான் மாடசாமி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், படுகொலைச் சம்பவம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் நேரடி உத்தரவின்பேரில் நடந்ததாகவும், சம்பவம் நடந்த போது அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் மீது பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 8வது எதிரியாககிருஷ்ணசாமி சேர்க்கப்பட்டுள்ளார்.அவரைக் கைது செய்யக் கோரி திரிசூலம் பகுதியில் கல் குவாரி தொழிலாளர்கள்நூற்றுக்கணக்கானோர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாடசாமியின் தம்பி சங்கிலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், டாக்டர் கிருஷ்ணசாமியின் நேரடி உத்தரவின் பேரில் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. முன் பகைகாரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது.
இக்கொலை வழக்கில் கிருஷ்ணசாமியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். ஆனால் 8வது குற்றவாளியாக அவரைபோலீஸார் சேர்த்துள்ளனர். அப்படி இருந்தும் அவரை இன்னும் கைது செய்யவில்லை, விசாரணை நடத்தவில்லை. எனவேகிருஷ்ணசாமியை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கோரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications