ராகிங்: பி.டெக் மாணவன் தற்கொலை
சென்னை:
சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர், ராகிங்கொடுமை காரணமாக, கல்லூரி விடுதியிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவன் நாவரசு, ராகிங் கொடுமையால்படுகொலை செய்யப்பட்டார்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகளைதீவிரமாக கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் இன்னும் கூட ராகிங் கொடுமைகள் நடந்து கொண்டுதான்உள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டுபி.டெக் படித்து வந்த மாணவன் ஸ்ரீதரன் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். பொத்தேரியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இவரிடம், சீனியர்மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. அவரை கேவலமாகவும் நடத்தியுள்ளது இந்தக் கும்பல். அமைதியானசுபாவம் கொண்ட ஸ்ரீதரன் இதனால் மன உளைச்சல் அடைந்தார்.
இந் நிலையில் தனது விடுதியில், அறையின் உட் கதவைப் பூட்டிக் கொண்டு ஸ்ரீதரன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பினர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மாணவனின் உடல், அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
உடலை வாங்க மறுத்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், ராகிங் கொடுமையால்தான் எனது ஸ்ரீதரன் இறந்து விட்டான்.இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் பிணத்துடன்போராட்டம் நடத்தினர்.
ஆனால், ஸ்ரீதரன் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கல்லூரியில் சேர்க்கும் கல்லூரிகளில் ஒன்று தான் இந்த காட்டாங்கொளத்தூர்எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி. ராகிங்கால் மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிந்தால் அடுத்த ஆண்டுமாணவர்களைச் சேர்க்க பெற்றோர் முன் வர மாட்டார்கள்.
இதனால் வசூல் போய்விடும் என்பதால், அந்த மாணவன் ராகிங்கால் தற்கொலை செய்யவில்லை என்று புருடா விடுகிறது. ராகிங்செய்தவர்களோடு, அதை கண்டுகொள்ளாமல் விட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் நியாயமாகஇருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications