தாமிரபரணியில் வெள்ளம்: மக்களுக்கு எச்சரிக்கை
நாகர்கோவில்:
தாமிரபரணி அணையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடம், அமராவதி, அடையாறு ஆகிய ஆறுகள் பொங்கிப் பெருகி பல்லாயிரக்கணக்கான மக்களை தத்தளிக்கவைத்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாவட்ட மக்களைபீதிக்குள்ளாக்கியுள்ளது.இந் நிலையில் அப் பகுதியில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 550 கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது. 305 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 410 கனஅடி நீர் வருகிறது. 499 கன அடி நீர் வெளியேறுகிறது.
பேச்சிப்பாறை அணையின் உச்சநீர்மட்டம் 48 அடியாகும். அணையின் தற்போதைய நீர்மட்டம் 42 அடியானதை தொடர்ந்துதாமிரபரணி ஆற்றில் நீர் திறந்து விடப்படவுள்ளது. இதனால் அதில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தாமிரபரணி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியுள்ள நிலையில் மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் நீர் நிலை உயர வாய்ப்புள்ளது.மேலும் மழை நீரும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் பாய்ந்தோடும்.
இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
பேச்சிப்பாறை அணையின் மட்டம் 42 அடியானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கையாககரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றார்.
தற்போது ஓடி வரும் அதிக நீரினால் குழித்துறை சுப்ரமணிய சுவாமி கோவில் மண்டபம் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்துநீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications