திமுக தரும் கெட்ட யோசனை: பாஜக தாக்கு
சென்னை:
தமிழக மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கினால் அது அதிமுக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்துவிடும் என திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கெடுதலையாக யோசனை கூறியதால்தான் மத்திய அரசு கூடுதல் நிவாரணநிதியை ஒதுக்காமல் அமைதி காக்கிறது என தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சமீபகாலமாக அதிமுகவுக்கு ஆதரவான நிலையை பாஜக எடுத்து வருகிறது. இந் நிலையில்சென்னையில் செய்தியாளர்களிடம் ராதா பேசுகையில்,தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 13,000 கோடியை ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்திவருகிறார். ஆனால் வெறும் ரூ. 500 கோடியுடன் நின்று விட்டது மத்திய அரசு.
இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மழை, வெள்ள சேதம் மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில், விரைந்துநிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்க வேண்டிய மத்திய அரசு பெருத்தஅமைதி காப்பது வியப்பாக உள்ளது.
எங்கே, ஜெயலலிதா கேட்ட நிதியைக் கொடுத்தால், அதை வைத்து அவர் சீரமைப்புப் பணிகளைச் செய்து, அது அதிமுக அரசுக்குநல்ல பெயரை ஈட்டித் தந்து விடுமோ என்ற பயத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் யோசனையைக் கேட்டு காங்கிரஸ் கூட்டணிஅரசு அமைதி காப்பதாகத் தோன்றுகிறது.
உடனடியாக தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ. 1,000 கோடி நிதியை ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும்பாஜகவினர் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் போராட்ட நேரிடும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications