சென்னையில் அமையும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலை
சென்னை:
![]() |
| ஜெயலலிதாவுடன் பி.எம்.டபிள்யூ. நிறுவன பொது மேலாளர் |
ஜெர்மன் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ சென்னையில் தனது தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் போட்டியிட்ட நிலையில் தமிழகத்தையே அந்தநிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ரூ. 180 கோடியில் சென்னை மறைமலை நகரில் தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ முடிவுசெய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் பிஎம்டபிள்யூ பொது மேலாளர்களான ரொனால்ட் ஜென்ட்ஸ், பீட்டர் ரோண்ட்னாபில் ஆகியோரும் தமிழகதொழில்துறைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
பல்வேறு மாநிலங்களும் பல சலுகைகளை அளிக்க முன் வந்த நிலையிலும் தமிழகத்தில் நிலவும் தொழில்துறைக்கு ஆதரவானசூழல், அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, ஏற்றுமதி-இறக்குமதி வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னையில்இந்தத் தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ தேர்வு செய்தது.
ஆண்டுக்கு ரூ. 2.19,240 கோடி புழங்கும் பிஎம்டபிள்யூ உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகும்.
மறைமலை நகரில் உள்ள மகிந்திரா வோர்ல்ட் சிட்டி வளாகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் பிஎம்டபிள்யூவின் தொழிற்சாலைஅமையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications