நெருங்கியது புயல்: திணறப் போகும் தென் தமிழகம்!- சென்னை தப்புமா?
சென்னை:
![]() |
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னமான பனூஸ் தற்போது தென் தமிழகத்தை நோக்கி திசை திரும்பியுள்ளது. இதனால்தெற்கு கடலோர தமிழகத்தில் நாளை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
அந்தமானுக்கு அருகே உருவான புதிய புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நேற்று காலை 800 கி.மீ.தொலைவில் இருந்த புயல் சின்னம் இன்று காலை 650 கி.மீ. தொலைவை நெருங்கிவிட்டது.
அது மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும் தமிழகத்தின் தென் பகுதியை நோக்கிச்செல்லத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தெற்கு கடலோர தமிழகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்யும்வாய்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு முந்தைய 3 புயல்களை விட இந்தப் புயல் சின்னம் மிக அதிகமான மழையைக் கொட்டும் என்று கருதப்படுகிறது. இன்றுகாலை நிலவரப்படி சென்னைக்கு 650 கிலோமீட்டர் தொலைவில் புயல் சின்னம் நலை கொண்டுள்ளது.
வலுவடைந்துள்ள இந்தப் புயல் சின்னத்தால் கடலூர், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரைஉள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தை நோக்கி வந்தாலும் இந்தப் புயலின் மையம் இலங்கையில்தான் கரையைக் கடக்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முன் உருவான புயலுக்கு பாஸ் (கழுகு) என்றும், தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் புயலுக்கு பனூஸ்என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதே போல புதிதாக உருவாகும் புயல்களுக்கும் பெயர் பட்டியல் தயராக உள்ளது. பனூசுக்கு அடுத்ததாக உருவாகும் புயலுக்குஇலங்கைப் பெயரான மாலா என்ற பெயரும், அதற்கு அடுத்ததாக உருவாகும் புயலுக்கு தாய்லாந்தின் முக்டா என்ற பெயரும்சூட்டப்பட இருக்கிறது.



Click it and Unblock the Notifications
