சட்டமன்றத் தேர்தல்: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளை முன் கூட்டியே நடத்தத் திட்டம்?
சென்னை:
இந்த கல்வியாண்டில் பிளஸ் 2, 10ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னதாகவே தேர்வுகளை நடத்தி முடிப்பது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவது உண்டு. மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரச்சாரம்,ஊர்வலங்கள் காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதும் வழக்கம்.
இதனால் தேர்வுகளை மனதில் வைத்தே தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் முடிவு செய்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ்டூ, 10ம்வகுப்புத் தேர்வுகளை மனதில் வைத்து தேர்தலை மே மாதத்துக்குத் தள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், தேர்தல் நாள் தள்ளிப் போவதை அதிமுக விரும்பவில்லை. அதைக் கொஞ்சம் முன் கூட்டியே சந்திப்பதுஜோதிடரீதியிலும் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து இதனால் ஏப்ரலுக்கு முன்னதாகவே அதாவது மார்ச், பிப்ரவரி மாதங்களிலேயே பொதுத் தேர்வுகளை நடத்திவிட்டுஏப்ரலில் தேர்தலை சந்திக்க அரசு தயாராகி வருவதாகத் தெரிகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசுத் தேர்வுகள் துறை அதிகாரிகளின் கூட்டம்சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தேர்வுகளை முன் கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.
அதன்படி பிளஸ் 2க்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. எழுத்து தேர்வுகளைபிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தொடங்குது என்றும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொதுவாக பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும். அதை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதியில்தொடங்கி, ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு பிப்ரவரி மாதமும்,10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் இறுதிக்குள்ளும் நிறைவடையும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications