சென்னையில் பில் கேட்ஸ்: ஜெ., கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.
மனைவி மெலிண்டாவுடன் தனது சொந்த விமானத்தில் சென்னை வந்த அவர் தாம்பரத்தில் உள்ள காச நோய் கட்டுப்பாட்டுமையத்துக்குச் சென்றார். எய்ட்சுக்கு எதிராக மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வு மையம் இது.சில எய்ட்ஸ் நோயாளிகளையும் சந்தித்த கேட்ஸ், தனது மெயிண்டா-கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் சில உதவிகளை இந்தமையத்துக்கு அவர் அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கிறார். மத்தியதகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் அழைப்பின் பேரில் கருணாநிதியை சந்திக்கவுள்ளார் கேட்ஸ்.
நாளை காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தொடங்கப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன்விவாதிக்கவுள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் சாதகமான தகவல் தொழில்நுட்ப சூழல் குறித்து கேட்ஸுக்கு ஜெயலலிதாவிளக்கமளிக்கிறார்.
பின்னர் சென்னையின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் நிர்வாகிகளை கேட்ஸ் சந்திக்கிறார். இந்த சந்திப்பைத் தொடர்ந்துமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தமிழக முதலீடுகள் குறித்து கேட்ஸ் அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்ச்சிகளிலும் கேட்ஸ் பங்கேற்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications