நிதி ஒதுக்கினால் ஜெ. ஒழுங்காக கொடுப்பாரா?: கருணாநிதி
சென்னை:
சுனாமி நிவாரண நிதியையை பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக வழங்காத ஜெயலலிதா, இப்போது மழை வெள்ள நிவாரணநிதியை மத்திய அரசு வழங்கினால் மட்டும் முறையாக கொடுத்து விடப் போகிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதிகேட்டுள்ளார்.
தமிழக மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 13,000 கோடியை முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரியுள்ளார். ஆனால்மத்திய அரசோ வெறும் ரூ. 500 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது.தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தான் தடுப்பதாக பாஜக உள்ளிட்டகட்சிகள் குறை கூறியுள்ளன.
இந் நிலையில் திமுக நாளிதழான முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள ஒரு பதிலில்,
சுனாமிக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியையே தமிழக ஆட்சியாளர்கள் முறையாக வழங்கவில்லை. அதில் ஏகப்பட்டமுறைகேடுகள்.
இந் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு உடனடியாக அதிக அளவில் நிவாரண நிதி வழங்கினால்,உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கா அதை ஆட்சியாளர்கள் கொடுப்பார்கள்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்அடங்கிய குழுக்களை தமிழக அரசு அமைக்க முன் வராதது ஏன்?
அமராவதி பாலம் இடிந்து, நொறுங்கிப் போய் விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் பாலம் அப்படியேதான் உள்ளது.ஜெயலலிதாதான் அகழி தோண்டிக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதற்கிடையே சுனாமி நிவாரண நிதியில் ஏகத்துக்கும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆவணங்களைசில மூத்த தமிழக அரசு அதிகாரிகளே கருணாநிதி வசம் கொண்டு போய் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதை வைத்துக் கொண்டு தான் மீண்டும் மீண்டும் சுனாமி நிவாரண நிதி மோசடியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணாநிதிஎன்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இந்த விஷயத்தில் கருணாநிதியுடன் மோத தமிழக அரசு தயாராக இல்லையாம்.
காரணம், கருணாநிதி வசம் உள்ள ஆவணங்களில் எல்லாமே முழு விவரமாக உள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications