மியாமி விமான நிலையத்தில் அமெரிக்கர் சுட்டுக் கொலை- ஏர்-மார்ஷெல்கள் அதிரடி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவில் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய விமானப் பயணியைஏர்-மார்ஷெல்கள் சுட்டுக் கொன்றனர்.

கொலம்பியாவில் இருந்து ஓர்லாண்டோ சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 757 விமானத்தின் கடைசிவரிசை இருக்கைகளில் ரிகோபெர்டோ அல்பிசார் மற்றும் அவரது மனைவி ஆன் பியூஸ்னர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

மனைவியுடன் அல்பிசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். பறந்து கொண்டிருந்த விமானத்தில் தனது மனைவியைவிரட்டுவதும், ஓடுவதுமாக இருந்தார்.

இந் நிலையில் விமானம் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது இருக்கையை விட்டு எழுந்த அல்பிசார்விமானத்தின் வாயிலை நோக்கி ஓடினார். விமானத்தில் அமர்ந்திருந்த இரு ஏர்-மார்ஷெல்கள் (விமான கமாண்டோக்கள்)அவரை விரட்டிக் கொண்டு ஓடினர்.

அவர்களைத் தொடர்ந்து ஆன் பியூஸ்னரும் ஓடினர். படிக்கட்டை அடைந்த அல்பிசாரை ஏர்-மார்ஷெல்கள் தடுத்து நிறுத்தினர்.அப்போது தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறினார் அல்பிசார்.

தனது கணவருக்கு மன நிலை பாதிப்பு இருப்பதாகவும், அவரிடம் குண்டு ஏதும் இல்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறினார்பியூஸ்னர்.

அதை காதில் வாங்காத ஏர்-மார்கெஷல்கள் பையை கீழே போட்டுவிட்டு கைகளை உயர்த்துமாறு அல்பிசாருக்கு உத்தரவிட்டனர்.பை போலார் டிஸ்சீஸ் என்ற மன அழுத்த வியாதி கொண்ட அல்பிசார் அந்த உத்தரவுகளை மதிக்கவில்லை.

தொடர்ந்து அவர் படிக்கட்டில் ஓட ஆரம்பித்தார். இதையடுத்து மனைவியின் கண் எதிரிலேயே அவரை ஏர்-மார்ஷெல்கள்சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து அவரது பையை அவசரமாக அப்புறப்படுத்தி விமான நிலையத்தின்உள்ளேயே ஓரிடத்தில் குண்டு வைத்து தகர்த்தனர்.

ஆனால், அந்தப் பையில் குண்டு ஏதும் இருக்கவில்லை.

44 வயதான அல்பிசருக்கு பை போலார் டிஸ்சீஸ் என்ற மன நோய் இருந்து வந்தது. இதனால் இல்லாத விஷயங்களை அவராகவேகற்பனை செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான மருந்தை உட்கொண்டால் நோய் அடங்கிஇருக்குமாம்.

ஆனால், விமானம் ஏறும் அவசரத்தில் மருந்தை உட்கொள்ளாமல் வந்துவிட்டதால் தாறுமாறாக நடந்து கொண்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற அமெரிக்காவின் அதிகப்படியான கெடுபிடிகளுக்கு முதன்முறையாக ஒரு அமெரிக்கரேசுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விமானத்தை கமாண்டோக்கள் சுற்றி வளைத்தனர். மியாமி விமான நிலையமும் மூடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+