சிகரெட் தகராறில் ஒரு கொலை: 7 பேருக்கு ஆயுள்
சேலம்:
வாலிபரை சிகரெட் வாங்கி வரக் கூறிய நபரைக் கொலை செய்ததற்காக 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
சேலம், அரிசிப்பாளையம் பாவேந்தர் தெருவில் வசித்து வந்தவர் குமாரவேல். இவரது நண்பர் கவுன்சிலர் வெங்கடேசன்.அடிக்கடி அவரைப் பார்ப்பதற்காக வெங்கடேசன் வீட்டுக்கு குமாரவேல் வருவது வழக்கம்.வெங்கடேசன் வசித்து வந்த அதே பகுதியில் அதிமுக பிரமுகர் நடராஜன் என்பவர் குடியிருந்தார். சம்பவ தினத்தன்று,வெங்கடேசன் வீட்டுக்கு குமாரவேல் வந்துள்ளார். அப்போது தெருவில் சென்ற நடராஜனின் தங்கை மகன் விஜய்யை அழைத்துதனக்கு சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய், நடராஜனிடம் சென்று இதுகுறித்துக் கூறினார். தங்களது பையனை சிகரெட் வாங்கி வருமாறுகூறுவதா என்று கோபமடைந்த நடராஜன், அவரது மகன் வெங்கேடசன், தங்கை சாந்தி, அவரது கணவர் மாது, அவரது தம்பிகோபால், மாதுவின் மகன்கள் விஜய், பிரபு, நடராஜனின் அக்கா மகன் சேகர் ஆகியோர் திரண்டு சென்று கடந்த 2003ம் ஆண்டுமார்ச் 2ம் தேதி இரவு குமாரவேலை வளைத்துப் பிடித்தனர்.
கொலை வெறியுடன், பயங்கர ஆயுதங்களுடன் நடராஜன் குடும்பம் தன்னை துரத்தியதால் பீதியடைந்த குமாரவேல் உயிரைக்காப்பாற்ற ஓடியுள்ளார். ஆனாலும் அவரை மடக்கிப் பிடித்த நடராஜன் குடும்பத்தினர் சரமாரியாக அவரை வெட்டிக் கொன்றனர்.
இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மாவட்ட தன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி முருகானந்தம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண் டனையும்,தலா ரூ. 1000 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார். கோபால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications