திண்டிவனத்துக்கு கல்தா: கட்டம் கட்டிய காங்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியையும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசனையும் விமர்சித்து கட்சி விரோத நடவடிக்கைகளில்ஈடுபட்டு வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சிமேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வட மாவட்டங்களில் காங்கிரஸ்க்கு திமுக தொகுதி ஒதுக்கவில்லை என்றும், வருகிற தேர்தலில்காங்கிரசில் உள்ள வன்னியர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் திமுக தலைமையை வற்புறுத்தினார்திண்டிவனம்.மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி சம்மதிக்க வேண்டும் என்றும் கூறினார். பல்வேறு மாவட்டங்களில்ஆதரவாளர்களை திரட்டி ரகசிய கூட்டங்களும் நடத்தி வந்தார். இதனால் திண்டிவனம் ராமமூர்த்தி கூட்டணிக்கு விரோதமாகநடப்பதாக காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
இந்த புகார்களை பரிசீலனை செய்த கட்சி மேலிடம் ராமமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தமிழக காங்கிரசில்பொறுப்புள்ள பதவி வகித்த நீங்கள் கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து பேசி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது என்றுகூறியிருந்தது.
கட்சிக்கு விரோதமாக செயல்படும் உங்களை காங்கிரசில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கு 7 நாட்களில் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. இதற்கு பொருத்தமான விளக்கம் வராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன பதில் அனுப்பினாலும், அடுத்த வாரத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரசில் இருந்துநீக்கப்படுவார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications