ஏரி உடைந்து 2,000 வீடுகளில் வெள்ளம்
திருச்சி:
திருச்சி அருகே தொட்டியம் ஏரி நிரம்பியிருந்த நிலையில் திடீரென்று கரை உடைப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சுற்றியுள்ள2,000 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.தமிழகத்தில் அடுத்தடுத்து உருவான புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததில் திருச்சி, சென்னை, கரூர், கடலூர்உள்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. திருச்சியில் காவிரி பாயும் மாவட்டம் என்பதால் பாதிப்பு சற்று அதிகமாகவேஇருந்தது. இந்த வெள்ள அபாயம் கடந்த 4 நாட்களாக சற்று ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் தொட்டியம் அருகே எம்.களத்தூர் என்ற இடத்தில் மழையால் நிரம்பியிருந்த ஏரிக்கரை நள்ளிரவு உடைப்புஏற்பட்டு 2,000 வீடுகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிக்கரை உடைந்ததால் வெள்ளம் சீறிப்பாய்ந்துஎம்.களத்தூர், பெரியார்நகர், அண்ணாநகர் ஆகிய தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து உடனடியாக தொட்டியம், காட்டுபுத்தூர், முசிறி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். வெள்ளம் சூழ்ந்தபகுதிகளில் இருந்து மக்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 2 பொக்லைன் எந்திரம் மூலம் உடைப்பை அடைக்கும் பணிமுடுக்கிவிடப்பட்டது. இந்த வெள்ளத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications