போலி எப்ஐஆர்: காக்கிகளின் பெரும் மோசடி
சென்னை:
(படம் நன்றி: தமிழ்முரசு) |
| கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தின் வெளியே எரிக்கப்பட்ட போலி எப்ஐஆர் |
போலியான எப்ஐஆர்களை அச்சடித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையங்களில் அப்பாவிகள் மீது போலியாக வழக்குகளைப்பதிவு செய்து, அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர் நமது மாண்புமிகு தமிழக போலீசார்.
போலீஸ் நிலையங்களில் ஒருவர் புகார் கொடுத்தால் அந்த புகாரை விசாரித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவுசெய்வார்கள். அதே போல போலீசாரே யாரையாவது ஏதாவது வழக்கில் பிடித்தால் அவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.
அந்த எப்ஐஆரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அல்லது ஏட்டுகளின் கையெழுத்து போடப்படும்.
காசு கொண்டா..
எப்ஐஆர் போடுவதற்கு முன்பே வழக்குகளில் இருந்து கழன்று கொள்ள விரும்புவோர் போலீசாருக்கு காசைத் தந்து வெளியில்வந்துவிடுவது வழக்கம். எப்ஐஆர் போட்டுவிட்டால் அவ்வளவு தான், கோர்ட்டு-கேஸ் என்று அலைய வேண்டி வரும் என்பதால்அதைப் பதிவு செய்வதை முடிந்த அளவுக்கு தவிர்ப்பார்கள் வழக்குகளில் சிக்கியோர்.
இந்த எப்ஐஆர் நகல் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒன்றும், அவரது வழக்கறிஞருக்கு ஒன்றுமாக வழங்கப்படும். மேலும்நீதிமன்றத்திலும் இந்த எப்ஐஆரின் ஒரு நகல் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு எப்ஐஆருக்கும் வரிசை எண் உண்டு.
இந்த எப்ஐஆர் புத்தகங்கள் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.அங்கிருந்து இவை காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
போட்டாச்சு...போட்டாச்சு..
எப்ஐஆர் போடுவதற்கு முன் ஒருவரை மிரட்டி அவ்வளவாக காசு வாங்க முடியாது. எப்ஐஆர் போட்டுவிட்டால் அதைக் காட்டிமிரட்டி அதிகமாக காசு வாங்கலாம். எப்ஐஆர் போட்டாச்சு.. இனிமே கோர்ட்டு, கேசு தான் என்று மிரட்டி எடுத்து விடுவார்கள்.இந்த எப்ஐஆரை கேன்சல் செய்யனும்னா அதுக்கு தனியா இவ்வளவு ஆகும் என்று சொல்லி மேலும் பணத்தைப் பறிப்பார்கள்.
இவ்வாறு பணம் வாங்கிய பின் ஒரிஜினல் எப்ஐஆர்களை கேன்சல் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு மேலதிகாரிகளுக்குபதில் சொல்ல வேண்டும்.
இந்த இடத்தில் தான் புகுந்து விளையாண்டுள்ளனர் பிராடு புத்தி போலீசார். அரசிடம் இருந்து வரும் எப்ஐஆர்களை ஒருபக்கமாகத் தூக்கிப் போட்டுவிட்டு, போலியாக தாங்களே எப்ஐஆர்களை வெளியில் அச்சகங்களில் அடித்து வாங்கியுள்ளனர்.பின்னர் யாராவது அப்பாவி புகார் கொடுக்க வந்தாலோ அல்லது போலீசாரே யாரையாவது ஏதாவது வழக்கில் கைது செய்தாலோஇந்த போலி எப்ஐஆர் புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த எப்ஐஆரைக் காட்டியே அவர்களை மிரட்டி பணம்வசூலித்துள்ளனர்.
மோசடி புகழ் கோவை, தர்மபுரி:
இந்த மோசடி கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் தான் மிக அதிகமாகஉள்ளது.
இந்த மோசடி சில நாட்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. போலி எப்ஐஆர் அச்சடிப்பதற்காகவே பிரஸ் ஒன்று சேலம்அஸ்தம்பட்டியில் உள்ளதாகவும், அங்கு சங்கர் என்பவர் அச்சடித்து போலீசாருக்கு வினியோகிப்பதாகவும் தகவல்கள்வெளியாகின. இந்த சங்கருக்கு பல காவல் நிலையங்களில் ராஜ மரியாதை தருவார்களாம்.
சிவப்பு விளக்கு சுழலும் கார் இல்லாத குறை ஒன்று தான். மற்றபடி காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கும் முழு மரியாதையும்இந்த பிராடுக்குக் கிடைத்துள்ளது.
விசாரணையில் ஐஜி:
இந்த மோசடி குறித்து தகவல் வெளியில் வந்ததையடுத்து விசாரணையில் குதித்தார் நேர்மைக்குப் பெயர் போன போலீஸ்அதிகாரியான சேலம் சரக ஐஜி சுப்பிரமணியம். சங்கர் நடத்தி வரும் கீர்த்தனா பிரிண்டிங் பிரஸ்சில் சோதனையிட்டார். ஆனால்,அப்போது அங்கு போலி எப்ஐஆர்கள் ஏதும் சிக்கவில்லை.
போலீஸ் ரெய்டு வரும் தகவலை பிராடு போலீசாரில் சிலரே சங்கருக்கு முன் கூட்டி தெரிவித்துவிட்டதால் அவன் அச்சடித்துவைத்திருந்த போலி எப்ஐஆர்களை பதுக்கிவிட்டான். இதையடுத்து சங்கரைத் தூக்கிக் கொண்டு போன ஐஜி சுப்பிரமணியம்,தனது பாணியில் தூக்கிப் போட்டு மிதித்து விசாரித்தார்.
அப்போது பதுக்கி வைக்கப்பட்ட கட்டுக் கட்டான போலி எப்.ஐ.ஆர்கள் இருக்கும் இடத்தைச் சொன்னான் சங்கர். இதையடுத்துஅவன் சொன்ன இடத்திலிருந்து போலி எப்ஐஆர் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அரசின் முத்திரையுடன் கூடிய போலியானஎப்ஐஆர் புத்தகங்கள் கட்டுக் கட்டாக சிக்கின.
இதைத் தொடர்ந்து சங்கரை போலீஸார் கைது செய்தனர். இவனுக்கு சேலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் தொடர்புண்டு.ஆனால், போலீசின் செல்லப் பிள்ளை என்பதால் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
288 காவல் நிலையங்களில் ரெய்ட்:
இந் நிலையில் போலி எப்ஐஆர்கள் வழங்கிய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 288 காவல்நிலையங்களில் உளவுப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனைக்கு உளவுப் பிரிவினர் வரக் கூடும் என்று தெரிந்து போனதையடுத்து சில காவல் நிலையங்களில் போலி எப்ஐஆர்கள்எரிக்கப்பட்ட செயல்களும் நடந்துள்ளன.
எப்ஐஆர் நகலை சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும் என்று சட்டம் கூறினாலும், இந்த சட்டம் படித்தவர்களுக்கேபலருக்கு தெரியாது, அவர்களின் இந்த அறியாமையையும் தங்களுக்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தி போலி எப்ஐஆர் மூலம்காக்கிச் சட்டைகள் பணம் பறித்து வந்துள்ளனர்
குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய போலீசாரே இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து போலீசின் மோசடி:
காவல் நிலைய போலீசாருக்கு சற்றும் சளைக்காதவர்கள் அல்ல போக்குவரத்துப் போலீசார். ஒரு பைக், வெள்ளை சட்டை, காக்கிபேண்ட்ஸ் சகிதம், கூடவே ஒரு சில போலீஸ் மற்றும் அந்த ஏரியா அல்லக்கைகள் சிலரோடு மர நிழலில் நின்று கொண்டு இளநீர்குடித்தவாரே சாலையை கண்காணிப்பார்கள்.
அதிகாரிகளின் கார்களுக்கு சல்யூட் அடித்த நேரம் போக, மற்ற நேரம் எல்லாம் ரோட்டில் போகும், வரும் டூ வீலர்களை எல்லாம்நிறுத்தி, எல்லா ஆவணங்களையும் காட்டினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி காசு கேட்பார்கள். லூனா மொபெட்டில் ஓவர்ஸ்பீடில் போனதாக எல்லாம் பைன் போடுவார்கள்.
அப்போது நம்மிடம் தருவார்களே ரசீது.. அதில் கூட பல போலியானவை தானாம். மேலும் இவர்களும் கூட போலியானஎப்ஐஆரும் போட்டு வந்துள்ளனர். இந்தக் காக்கிகளின் மோசடி குறித்தும் இப்போது ரகசிய விசாரணை நடக்கிறது.
பயிர் மேயும் வேலிகள்.., நாடு உருப்படும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications