வளர்ப்பு மகன் சுதாகரன் கொலை முயற்சி வழக்கு
சென்னை:
கொலை முயற்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் மீது சென்னை கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சுதாகரனின் பெயரில் சின்ன எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் என்ற அமைப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக கோபு ஸ்ரீதர் என்பவர் இருந்து வந்தார். மன்றத்தின் நிதியில் பெரும் முறைகேட்டில்ஈடுபடுவதாக சுதாகரனுக்குத் தகவல் கிடைக்கவே கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி கோபுவை அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது கோபமடைந்த சுதாகரன், கோபுவை அடித்துள்ளார். அத்தோடு சுதாகரனின் தந்தை விவேகானந்தன்,எஸ்.ஆர்.பாஸ்கரன், தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீன், சுரேஷ் ஆகியோரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் துப்பாக்கிமுனையில் கோபுவை, சுதாகரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுதாகரன் மற்றும் ஐந்து பேர் மீது சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் வியாழக்கிழமை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை பின்னர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஏற்கனவே சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் சும்மா திரிந்த சுதாகரனிடம் இன்றுஏகப்பட்ட கோடிகள் குவிந்து கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications