பிச்சைகாரிகள் போல் நடித்து நகை அபேஸ்: 2 பெண்கள் கைது
சென்னை:
பிச்சைக்காரிகள் வேடத்தில் வீட்டுக்குள் புகுந்து, நகையை கொள்ளை அடித்த கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூர் பகுதியில் பிச்சை எடுப்பது போல நடித்து இரண்டு இளம் பெண்கள் கைக்குழந்தையுடன் சென்று வீடுகளில்நுழைந்து திருடிச் சென்றுவிட்டனர்.எழும்பூர் காஜாமைதீன் தெருவில் வசிக்கும் இளங்கோவன் என்பவர் வீட்டில் அவரது மனைவி கதவை சாத்தி விட்டு பக்கத்துவீட்டுக்கு சென்றிருந்தார். இதை தெரிந்து கொண்ட பிச்சை எடுக்க வந்த பெண்களில் ஒருத்தி வீட்டுக்குள் புகுந்தாள்.இன்னொருத்தி வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள். வீட்டுக்குள் புகுந்த பெண், பீரோவில் இருந்த 1 சவரன் நகையைஎடுத்துக் கொண்டு வந்தவுடன் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதை தொடர்ந்து இந்த இரண்டு பெண்களும் எழும்பூர் நாரயண நாயக்கன் முதல் தெருவில் வசிக்கும் உசேன் சேட் என்பவர்வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டனர். அங்கு வீட்டில் தனியாக இருந்த சேட் மனைவியிடம் முதலில் தண்ணீர் தாருங்கள், பிறகுசாப்பாடு தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
இரக்கப்பட்ட சேட் மனைவி தண்ணீர் கொண்டு வர வீட்டினுள்ளே சென்ற நேரத்தில் பீரோவில் இருந்த 4 சவரன் தங்க செயினைஎடுத்துக் கொண்டு 2 பிச்சைக்கார பெண்களும் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்த கமிஷனர் நடராஜ், இணை கமிஷனர் சுந்தரமூர்த்தி, துணை கமிஷனர்திருஞானம், உதவி கமிஷனர் முரளி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஆறுமுகம் ஆகியோர்தலைமையில் தனிப்படை அமைத்து நகைகளுடன் தப்பிய பெண்களை பிடிக்க உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நகைகளை திருடிச் சென்ற 2 பெண்களையும் சென்னை நகர் முழுவதும் வலை வீசி தேடி கடைசியாகசென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகிலுள்ள அல்லிக்குளம் பகுதியில் அந்த பெண்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதான பெண்கள் பெயர் சரிதா (வயது 28), பழனியம்மா (வயது 33) என்றும், இவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும்விசாரணையில் தெரிய வந்தது. 2 பெண்களும் திருமணமானவர்கள். பழனியம்மாள், 2 வயது பெண் குழந்தையை கையில்வைத்திருந்ததுடன், 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இவர்கள் 2 பேரும் பிச்சை எடுப்பது போல நடித்து மேலும் பல இடங்களில் திருடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவேபோலீசார் தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications