எச்சரிக்கை: சென்னையில் பரவுது காலரா!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வட சென்னையில் சமீபத்தில் பெய்த கடும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம்வீசுவதால் காலரா நோய் பரவி வருகிறது.சாலையில் தேங்கி கிடந்த தண்ணீர் சாக்கடையாக மாறியதால் வட சென்னை பகுதிகளில் காலரா நோய் பரவும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைக்கு வந்துபரிசோதனை செய்து கொள்கிறார்கள்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் செய்து கொண்ட பரிசோதனையில் 4 பேருக்கு காலரா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காலரா நோய் மேலும் பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கும் படியும், சாலைகளில்செல்வோர் செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என்றும் தண்டையார்பேட்டை மருத்துவமனை டாக்டர் ஜனார்த்தனம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications