குமரியில் கடல் உள்வாங்கியது
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வங்கக் கடலில்உருவாகியுள்ள ஃபனூஸ் புயல் இன்னும் சில மணி நேரத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடக்கவுள்ளது.இந்த நிலையில் இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ளது. அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில கடல்பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளது. கீழ மணல்குடி, மேல மணல்குடி, கோவளம், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில்சில மீட்டர் தொலைவுக்கு கடல் உள் வாங்கியுள்ளது.
மேலும், கடலும் அமைதியாக அலைகளற்றுக் காணப்படுகிறது. திடீரென கடல் உள் வாங்கியதால் மீனவர்கள் கடலுக்குள்செல்லவில்லை. பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். ஃபனூஸ் புயலின் விளைவாக இதுபோல ஏற்பட்டிருக்கக் கூடும் எனபொதுமக்கள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications