கருணாநிதி விழாவுக்கு போலீஸ் திடீர் தடை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி விருது வழங்கும் விழாவை, சென்னை ராஜாஜி நினைவிடத்தில் நடத்த போலீஸார் தடைவிதித்தனர்.
ராஜாஜியின் 127வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிருது வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ராஜாஜி நினைவிடத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ராஜாஜி நினைவிடத்தில் விழாவை நடத்த சென்னை காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. கோட்டூர்புரத்தில்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ராஜாஜி நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு விழாக்கள் நடத்தக் கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் காரணம் காட்டி கருணாநிதிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த போலீஸார் தடை விதித்து விட்டனர். இதைத்தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறும் என ராஜாஜிபவுண்டேஷன் அறங்காவலர் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார்.
ராஜாஜி நினைவிடத்தில் விழா நடத்த முதலில் அனுமதி கொடுத்து விட்டு பின்னர் அதை ரத்து செய்த காவல்துறைக்கு திமுககண்டனம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications