பிளஸ் 2 வினாத்தாளில் மாற்றம்: கல்வித்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் 2 வினாத்தாள்களில் கல்வித்துறை சில மாற்றங்கள் செய்துள்ளது.

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் வினாத்தாள்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியமுழு விவரங்களையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இயற்பியல்:

இயற்பியல் வினாத்தாளில் முதல் பகுதியில் முன்பு 50 ஒரு மார்க் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது இந்த வினாக்கள் 30ஆக குறைக்கப்பட்டுள்ளன. புதிய முறைப்படி 2ம் பகுதியில் மொத்தம் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 15வினாக்களுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். ஒரு வினாவுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். முன்பு இந்த பகுதியில்20 இரண்டு மார்க் வினாக்கள் கொடுக்கப்பட்டு அதில் 15 வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளித்தனர்.

அது போல, 3வது பகுதியில் 12 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 7 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். ஒருவினாவுக்கு 5 மதிப்பெண்கள். முன்பு இந்த பகுதியில் 10 வினாக்கள் கொடுக்கப்பட்டு அதில் 6 வினாக்களுக்கு மாணவர்கள் பதில்அளிக்க வேண்டியது இருந்தது. 4ம் பகுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்பிரிவில் 8 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் 4 வினாக்களுக்கு மாணவர்கள் பதில் எழுத வேண்டும். ஒரு வினாவுக்கு 10 மதிப்பெண்கள்.

வேதியல்:

வேதியல் வினாத்தாளிலும் முதல் பகுதியில் முன்பு இருந்த 50 ஒரு மார்க் வினாக்கள் 30 ஆக குறைக்கப்பட்டுள்ளன. 2ம், 3ம்பகுதிகளில் இயற்பியல் போலவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4ம் பகுதியில் எவ்வித மாற்றமும் இல்லை.

உயிரியல்:

உயிரியல் பாடத்தை பொறுத்தவரை தாவரவியல், விலங்கியல் ஆகிய 2 பிரிவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாவரவியல்வினாத்தாளில் முதல் பகுதியில் முன்பு 26 ஒரு மார்க் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் தற்போது அது 14 கேள்விகளாககுறைக்கப்பட்டுள்ளது. முன்பு 2ம் பகுதியில் 10 இரண்டு மார்க் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 7 வினாக்களுக்கு பதிலளிக்கவேண்டும். தற்போது 2ம் பகுதியில் 10 மூன்று மார்க் கேள்விகள் கேட்டு 7 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அதே போல புதிய முறையில் 3வது பகுதியில் 7 ஐந்து மார்க் வினாக்கள் கேட்கப்படும். அதில் 4 வினாக்களுக்கு மாணவர்கள்விடை அளிக்க வேண்டும். ஒரு வினாவுக்கு 5 மதிப்பெண்கள். முன்பு இப்பிரிவில் 5 மார்க் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதில் 3வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டியதிருந்தது. 4வது பகுதியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

விலங்கியல் பாடத்தில் முதல் பகுதியில் முன்பு 24 ஒரு மார்க் வினாக்கள் இடம் பெற்றிருந்தது. புதிய வினாத்தாளில் இது 16வினாக்களாக குறைக்கப்பட்டுள்ளது. அது போல 2வது பகுதியில் முன்பு 12 மார்க் வினாக்கள் கொடுக்கப்பட்டு மாணவர்கள் 8வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டியது இருந்தது. ஆனால் புதிய முறையில் 12 முன்று மார்க் வினாக்கள்கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 8 வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். 3வது, 4வது பகுதியில் எவ்விதமாற்றமும் செய்யப்படவில்லை.

தாவரவியல் விலங்கியல்:

அறிவியல் பிரிவில் வரும் தாவரவியல், விலங்கியல் தனிப்பாடங்களின் வினாத்தாள்களிலும் சில மாற்றங்கள்செய்யப்பட்டுள்ளன. இந்த 2 வினாத்தாள்களின் முதல் பகுதியில் முன்பு 50 ஒரு மார்க் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. புதியவினாத்தாள்களில் இது 30 வினாக்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அது போல 2ம் பகுதியில் முன்பு 20 இரண்டு மார்க் வினாக்கள் கேட்கப்பட்டு அதில் 15 வினாக்களுக்கும் மாணவர்கள் பதில் எழுதவேண்டியது இருந்தது. ஆனால் புதிய வினாத்தாளில் 20 மூன்று மார்க் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் 15 வினாக்களுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். அது போல 3வது பகுதியில் முன்பு 6 ஐந்து மார்க் மாணவர்கள்அளிக்க வேண்டியது இருந்தது. இப்போது 7 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். 4வது பகுதியில் எவ்வித மாற்றமும்இல்லை.

புதிய முறைப்படி மேற்கண்ட பாடங்களில் மாணவர்கள் எந்த அளவுக்கு ஒரு விஷயத்தை புரிந்து வைத்துள்ளனர் என்பதைஅறியும் வகையிலேயே வினாத்தாள்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+