துறைமுகங்கள் காலி: நடு கடலுக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள்- இந்தோனேஷிய கப்பல் எங்கே?
சென்னை:
தமிழகத்தை புயல் தாக்கியதால் சென்னை, தூத்துக்குடி, நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து அனைத்துப் பெரியகப்பல்களும் நடுக் கடலுக்கு அனுப்பப்பட்டன.
புயல் எச்சரிக்கை கூண்டு எண் 5ம் மற்றும் அதற்கு மேலும் உள்ள எண் கூண்டுகள் ஏற்றப்பட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும்இருந்த கப்பல்களும் நடுக்கடலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டன.புயல் கரையைக் கடக்கும்போது கரைப் பகுதியில் தான் மிக பலத்த காற்று வீசும். நடுக் கடலில் பாதிப்பு அவ்வளவாக இருக்காது.
இதையடுத்து வேதாரண்யம், ராமேஸ்வரம், புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி ஆகிய கடற்கரைகள், துறைமுகங்களில் இருந்தசரக்குக் கப்பல்கள், போக்குவரத்துக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள் ஆகியவை நடுக்கடலுக்குகொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கப்பல்களும் துறைமுகங்களைக் காலி செய்தன.
இந்தோனேஷிய கப்பல் எங்கே?:
இதற்கிடையே, நாகப்பட்டிணம் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த இந்தோனேஷிய சரக்குக் கப்பல் இன்னும் வந்துசேரவில்லை என்று கூறப்படுகிறது.
அந்தக் கப்பல் நவம்பர் 30ம் தேதி இந்தோனேசியாவின் டுமாய் நகரிலிருந்து பாமாயிலை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.வழக்கமான பாதையில் பயணித்திருந்தால், வெள்ளிக்கிழமை அக்கப்பல் நாகை வந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வங்கக் கடலில் நிலவுகின்ற புயல் சூழ்நிலையில், கப்பல் இன்னும் வராமல் இருப்பதால், நடுக்கடலில்எங்காவது சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்தக் கப்பலிலிருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை என்றும்கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications