நாகப்பட்டிணம், கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியது
குமரி - நாகை:
கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டிணத்தில்ல கடல் உள் வாங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக நாகை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் பேய்மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் ஆறுகாட்டுத்துறையில் 50 அடி தூரத்துக்கு கடல் திடீரென்று உள்வாங்கியது. இதனால் அந்த பகுதி மக்களிடையேபெரும் பீதி ஏற்பட்டது.
கடந்த ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் இதேபோல கடல் உள்வாங்கியது. சற்று நேரத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்குகடல் கொந்தளிப்பு ஏற்பட்டு நாகை மாவட்ட கடலோர கிராமங்களையே சுருட்டிச் சென்றது.
பொது மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆறுகாட்டுத்துறையில் வசித்தஅனைத்து மீனவர்களும் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறையில் இன்று காலை கடல் 50 அடி தொலைவுக்கு உள் வாங்கியதால், மக்கள் பீதியடைந்தனர். சுனாமி தாக்குதல்வந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
குமரியில்...
அதே போல கன்னியாகுமரியில் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபனூஸ் புயல் இன்னும் சில மணி நேரத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடக்கவுள்ளது.
இந்த நிலையில் இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ளது. அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில கடல்பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளது. கீழ மணல்குடி, மேல மணல்குடி, கோவளம், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில்சில மீட்டர் தொலைவுக்கு கடல் உள் வாங்கியுள்ளது.
மேலும், கடலும் அமைதியாக அலைகளற்றுக் காணப்படுகிறது. திடீரென கடல் உள் வாங்கியதால் மீனவர்கள் கடலுக்குள்செல்லவில்லை. பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். ஃபனூஸ் புயலின் விளைவாக இதுபோல ஏற்பட்டிருக்கக் கூடும் எனபொதுமக்கள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications