ஏ.சி.சண்கத்திற்குச் சொந்தமான கல்லூரி இடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்கத்திற்குச் சொந்தமான நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் சில கட்டடங்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்கத்திற்குச் சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ளது. அங்குள்ள கூவம் ஆற்றின் கரையை ஒட்டி இந்த பல்கலைக்கழகம்உள்ளது.

இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், எம்.ஜி.ஆர். பொறியியல்கல்லூரி ஆகியவை உள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் 10 பெரிய மற்றும் 5 சிறிய கட்டிடங்கள், பரிசோதனைக் கூடங்கள்,சைக்கிள் ஸ்டேண்ட், விடுதி உள்ளிட்டவை உள்ளன.

இந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் பல, கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் சென்னைமற்றும் புறநகர்களில் பெய்த கன மழை மற்றும் ஏரிகள் உடைப்பு காரணமாக அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் பெரும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகியது. இந்த நிலையில் ஏரிகள் மற்றும் ஆறுகளில்ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

முதல் கட்டமாக கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகள் மற்றும் போரூர் ஏரியைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிசனிக்கிழமை தொடங்கியது. கூவம் ஆற்றில் உருவாகியுள்ள ஆக்கிரமிப்புகளை புல்டோசர்கள் கொண்டு அதிகாரிகள் இடித்துத்தள்ளினர்.

அந்த வகையில் ஏ.சி. சண்கத்தின் நிகர் நிலைப் பல்கலைக்கழக கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. முதலில் சுற்றுச் சுவர்,கோட்டை போன்ற வடிவில் அமைந்த கட்டிடம், பாதுகாவலர்கள் தங்கும் அறை போன்றவை இடித்துத் தள்ளப்பட்டன.

தகவல் அறிந்ததும், ஏ.சி.சண்கத்தின் தம்பியும், கல்லூரி செயலாளருமான ரவிக்குமார் அங்கு வந்து இடிப்பை நிறுத்துமாறுஅதிகாரிகளைக் கோரினார். ஆனால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெரும்பாலானகட்டிடங்கள் அரசு நிலத்தையும், கூவம் ஆற்றையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ. 15 கோடியாகும். ஏற்கனவே இவற்றை அகற்றுமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும்தற்போதைய மழை, வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு கூவம் ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறுஅரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 5 புல்டோசர்களுடன் அகற்றி வருகிறோம். தேவைப்பட்டால் அதிக புல்டோசர்கள் மற்றும் ஊழியர்களுடன் சென்றுஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு இந்தப் பல்கலைக்கத்திற்கு சில கட்டிடங்களே மிஞ்சிநிற்கும் என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+