பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: மு.க.அழகிரி
சென்னை:
மழை, வெள்ளத்தால் தமிழகமே தத்தளித்துக் கொண்டுள்ளதால் எனது பிறந்த நாளை திமுகவினர் யாரும் கொண்டாடவேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனது பிறந்த நாளை, என் விருப்பத்திற்கு மாறாக, கழகத் தோழர்கள்விழாவாக, விமரிசையாக கொண்டாட முன் வந்து விளம்பரங்கள் செய்து வருவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.கழகப் பொதுச் செயலாளர், தலைவர் கலைஞருடன் கலந்து பேசி, தனது பிறந்த நாளையொட்டி விளம்பரங்களோ, விழாஏற்பாடுகளோ எதையும் செய்யக் கூடாது என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எனவே அதைப் பின்பற்றி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கவலையில் மூழ்கியுள்ள இந்த வேளையில்அவர்களுக்கான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டுமே அல்லாமல், பிறந்த நாள் விழா என்று நம்டைய நண்பர்கள்ஈடுபடுவது அறவே கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை மீறி யாராவது பிறந்த நாளை கொண்டாட முயன்றாலும், விளம்பரங்கள் செய்தாலும் அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியசெயலாகும் . அவர்கள் மீது தலைமைக் கழகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க நேரிடும் என்று தனதுஅறிக்கையில் அழகிரி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications