ஹேட்ஸ் ஆப் கலெக்டர் ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி
நாகப்பட்டனம்:
வேதாரண்யம் அருகே அடர்ந்த பசுமை மரக் காடுகள் நிரம்பிய பகுதியில் கரையைக் கடந்ததால் சேதம் எதுவும் இல்லாமல்,ஃபனூஸ் புயல் கரை கடந்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனின் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளாலும் உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி கடலோரத் தமிழகத்தைக் கலக்கி வந்த ஃபனூஸ் புயல் நேற்று பிற்பகல் 12 மணி வாக்கில் நாகைமாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடக்கும் முன்பே வலுவிழந்து விட்டது. மேலும், அது கரையைக் கடந்த இடம் வேதாரண்யம் அருகே உள்ளபசுமை நிறக் காடுகள் அடங்கிய அடர்ந்த காட்டுப் பகுதியாகும். இதன் காரணமாக பொதுமக்களுக்கு சேதம் ஏதும்ஏற்படவில்லை.
மேலும், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்து வைத்திருந்த அட்டகாசமான முன்னேற்பாடுகள்காரணமாக ஒரு சேதம் இல்லாமல் நாகை மாவட்ட மக்கள் காப்பாற்றப்பட்டனர். பொருட்சேதம் அதிகம் இல்லை என்பதுதான் இதில் விசேஷமானது.
புயல் வரப் போகிறது என்று அறிவிக்கப்பட்டவுடனேயே கடலோரத்தில் வசித்த வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டனர். மேலும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ராணுவத்தினர்முன்னேற்பாடாக முக்கிய பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இது தவிர வெள்ள நிவாரணமுகாம்களும் உணவு,உடைகள் உள்ளிட்ட பொருட்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்த காரணத்தால் புயல் பாதிப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, உயிர்ச் சேதம்தடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த துரித கதியிலான நடவடிக்கையால் நாகை மக்கள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தை புயல் கரையை நெருங்குவதற்கு முன்பு பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்கியது. இருப்பினும் புயல்கரையைக் கடந்த போது மிகவும் குறைந்த வேகத்திலான அதாவது மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே காற்று வீசியது.
புயல் சென்ற பின்னர் தற்போது லேசான அளவில் மட்டுமே நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துவருகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்தப் போகிறது என்று கணிக்கப்பட்ட ஃபனூஸ் ஒரு சேதத்தையும் ஏற்படுத்தாமல் கரையைக்கடந்தது நாகை மாவட்ட மக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இதே போல கடலூர் மாவட்டத்தில் புயலை சமாளிக்க கலெக்டர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மாவட்ட நிர்வாகம் பலமுன்னேற்பாடுகளை செய்திருந்தது.
தேவனாம்பட்டினம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டது.மாவட்டத்தின் 57 கிலோமீட்டர் தொலைவிலான கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 51 கிராமங்களில் வசிப்போர் அங்கிருந்துஅப்புறப்படுத்தப்பட்டனர்.
பிற பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மின்சார இணைப்புகளை தேவைப்பட்டால் துண்டித்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
21 இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு புயல் தாக்ககும் அபாயம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தமையங்களில் வைக்கப்பட்டனர். மேலும் 25 இடங்களில் உணவு சமைக்கும் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பாதிக்கப்படும் மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 15மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் பக்காவாக செய்திருந்தார் மாவட்ட கலெக்டர்ககன் தீப் சிங் பேடி. சபாஷ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications