வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
சென்னை:
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் வியாபாரியை தாக்கி ரூ.3 லட்சம் பறித்ததாக போலீஸ் தலைமை காவலர் உள்படசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணடி நைனியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது இக்பால். இவர் வியாபார விஷயமாக திருச்சிசெல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு வந்துள்ளார். அவர் தனது இடுப்பில் ரூ. 3 லட்டசத்தை மறைத்துவைத்திருந்தார்.தனியார் ஆம்னி பஸ்சை பிடிப்பதற்காக கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாதாரணஉடை அணிந்த 2 பேர் அவரிடம் வந்து மிரட்டினார்கள். நீ யார், உன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உன்னிடம் இருக்கும்பணத்தை கொடு விசாரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
நீங்கள் யார் என்று வியாபாரி இக்பால் கேட்டதற்கு போலீசார் என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால்அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் வேறு எங்கோ அழைத்து சென்றுள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று ஒருவர்அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றார். உடனே அவர்களிடம் தப்பிய இக்பால் கோயம்பேடு போலீஸ்நிலையத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.
அங்கே பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். உடனே போலீசார் ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த 2பேரையும் அழைத்தனர். போலீசை பார்த்ததும் 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் போலீஸ்காரர்கள் என்றும் ஒருவர் பெயர் வெற்றிச்செல்வன்சப்-இன்ஸ்பெக்டராகவும், மற்றொருவர் குமார் போலீஸ் ஏட்டாகவும் ராமநாதபுரம் மாவட்டம் நடலாடி போலீஸ் நிலையத்தில்பணியாற்றுகிறார்கள் என்று தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த இணை கமிஷனர் சுந்தரமூர்த்தி, துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் அலிபாஷா ஆகியோர்கோயம்பேடு போலீஸ் நிலையம் விரைந்து வந்தனர். அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பின் அவர்கள்அதிகாரப்பூர்வமாக தாங்கள் போலீஸ்காரர்கள் என்று ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் 2 பேரும் வேறு எதாவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications