காவஸ்கர் சாதனையை முறியடித்த சச்சின்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Sachin Tendulkar

டெல்லி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 35 வது சதத்தை எடுத்த சச்சின், கவாஸ்கரின் சாதனையை முறியடித்து, நேற்றுபுதிய உலக சாதனை படைத்தார்.

டில்லியில் நிலவிய பனிப்பொழிவு காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் தாமதாக தொடங்கியது. இந்திய அணியில் சேவக்நீக்கப்பட்டு, யுவராஜ்சிங் அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார். சேவக் இல்லாத காரணத்தால், டிராவிட் மற்றும் காம்பீர்தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காம்பிர்(2),ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சென்னை போட்டியில் தடுப்பு ஆட்டத்தை கையாண்ட சச்சின் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பெர்னான்டோ பந்தில் "ஸ்கொயர் லெக் திசையில் தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

உணவு இடைவெளியின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவெளிக்குப் பிறகு சிறிதுநேரத்தில் 9 பவுண்டரிகளுடன் லட்சுமண் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பிறிகு லட்சுமண் அவுட் ஆனார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்தது.லட்சுமண் ஆட்டமிழந்ததை தொடர்ந்து "மாஜி கேப்டன் கங்குலி,சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். கங்குலி 11 ரன்கள் எடுத்திருந்த போது முரளியின் பந்தில் " ஸ்டெம்பிங் வாய்ப்பை சங்ககராதவறவிட்டார். தேநீர் இடைவெளியின் போது இந்தியா 164 ரன்கள் எடுத்திருந்தது. டெண்டுல்கர் (48) மற்றும் கங்குலி (14)ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Sachin Tendulkar and Sunil Gavaskar

சிறிது நேரத்தில் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கங்குலி மற்றும் சச்சின் ஜோடியை பிரிக்கஇலங்கை பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 70 வது ஒவரில் ஆட்டத்தின் முதல் சிக்சரை டெண்டுல்கர் விளாசினார்.சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது அவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை இலங்கை வீரர்கள் தவற விட்டனர். 74வது ஒவரில்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த ஒவரின் கடைசி 3 பந்துகளில் சச்சின் ரன் எதுவும் எடுக்கவில்லை. 75வது ஒவரை வாஸ் வீசினார்.

முதல் பந்தை கங்குலி எதிர்கொண்டார். 2 வது பந்தில் கங்குலி ஒரு ரன் எடுக்க,உலக சாதனை ஏற்படுத்தும் வாய்ப்பு சச்சினுக்குகிட்டியது. 3 வது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் சச்சின் ஒரு ரன்னுடன் தனது சாதனை சதத்தைபூர்த்தி செய்தார்.

அவரது சதத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடக்கம். போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் 75 .4 ஒவர்களுடன்முடித்துக் கொள்ளப்பட்டது. இரண்டாம் நாளான இன்று சச்சின் , கங்குலி ,மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் குவித்து இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்.

இலங்கை தரப்பில் முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.நேற்றைய ஆட்டத்தில் 35 வது சதத்தை நிறைவு செய்த மாஸ்டருக்குபிரதமர், ஜனாதிபதி, சோனியா,கவாஸ்கர், சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் வாழ்த்துக்களைதெரிவித்த வண்ணம் உள்ளனர். சச்சின் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் விளிம்பில் இருப்பதால்தான், அவர் அணியில்இடம்பெறுவது இந்தியாவுக்கு பெருமையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+