மக்களிடம் மாட்டி முழித்த மணிசங்கர் அய்யர்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்மணிசங்கர அய்யரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதேபோல கொள்ளிடம் ஆற்றுவெள்ளத்தாலும் ஏராளமான கிராமங்களில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர்.

இந் நிலையில் அய்யரின் தொகுதியான மயிலாடுதுறைக்கு உட்பட்ட சோழபுரம், திருப்பனந்தாள், உக்கரை உள்ளிட்ட சிலகிராமங்களில், கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய அமைச்சர் மணிசங்கர்சென்றார்.

அவர் அணைக்கரை என்ற ஊருக்கு வந்தபோது ஊருக்குள் அவரை கிராம மக்கள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

மழை, வெள்ளத்தால், உயிர்கள், உடமைகளை இழந்து நாங்கள் பரிதவிக்கிறோம். ஆனால் இதுவரை நீங்கள் வரவும் இல்லை,நிவாரண உதவியும் வழங்கவில்லை. இப்போது மட்டும் எதற்காக வந்திருக்கிறீர்கள்? உயிருடன் இருக்கிறோமா, இல்லையாஎன்பதைப் பார்க்க வந்திருக்கிறீர்களா என்று ஆவேசமாக கேட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய அய்யர், வேலைப்பளு காரணமாக என்னால் வர முடியவில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு ரூ.500 கோடி வழங்கியுள்ளது. ஆனால் அதை வழங்குவதில் தமிழகஅரசு தாமதம் செய்கிறது. உங்களை நான் மறக்கவில்லை,புறக்கணிக்கவில்லை என்றார்.

இருப்பினும் மக்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய அய்யர் வேறு சில ஊர்களைப் பார்த்து விட்டுசோகத்துடன் திரும்பிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+