விஜயகாந்த்துக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: இளங்கோவன்
ஈரோடு:
தமிழக மழை, வெள்ள நிவாரணத்திற்காக தமிழகம் மற்றும் புதுவையச்ை சேர்ந்த 40 எம்.பிக்களும் ஒன்றும் செய்யவில்லை என்றுநடிகர் விஜயகாந்த் கூறியிருப்பது, அவருக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி வரவில்லை என்பதையே காட்டுகிறது என மத்தியவர்த்தகத் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சரிவர உதவவில்லை, கூடுதல் நிதி ஒதுக்கவில்லை, 40 எம்.பிக்களும்என்ன செய்தார்கள் என்று ஆவேசமாக கேட்டுள்ளார் விஜயகாந்த்.
ஒட்டுமொத்தமாக அவர் அனைத்து எம்.பிக்களையும் குறை கூறியது தவறு. நான் ஈரோடு மாவட்டத்தில் காவிரி வெள்ளத்தால்பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியுள்ளேன். எனவே அரசியல் முதிர்ச்சியுடன் விஜயகாந்த் எதையும் பேச வேண்டும்.அது இன்னும் அவருக்கு வரவில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக திமுக தலைவர்கருணாநிதியின் கருத்தை மறுத்துப் பேச எங்களுக்கும், அதை மறுத்துப் பேச அவருக்கும் உரிமை உண்டு.
சட்டசபைத் தேர்தலை சந்திக்க இன்னும் காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகாமல் உள்ளது. ஆனால் திமுக, அதிமுக போன்ற கட்சிகள்எல்லாம் தேர்தலுக்குத் தயாராகி விட்டன.
நூறு ஆண்டுகளைத் தாண்டியும் உயிரோட்டத்துடன் உள்ள கட்சி காங்கிரஸ். எனவேதான் அதில் அதிக அளவில் கோஷ்டிப்பூசல்கள் உள்ளன. இது தவிர்க்க முடியாதது. காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அது கண்டிப்பாக நடக்கும்,எப்போது நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications