சுனாமி: தமிழகத்தின் கடனை அடைக்க ப.சி தயாரா?- ஜெ கேள்வி
சென்னை:
சுனாமி நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளுக்காக சர்வதேச அமைப்புகளிடம் நான் வாங்கிய கடனை நிதியமைச்சர் ப.சிதம்பரம்திருப்பிக் கொடுப்பாரா என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சர்வதேச நிதி அமைப்புகளிடம் மாநில அரசுகள் வாங்கும் கடனை திருப்பித் தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாகசிதம்பரம் பேசியிருக்கிறார்.
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக தமிழகம் வாங்கிய கடனை திருப்பித் தருவோம், தமிழகத்தின் நிதிச் சுமையைக் குறைப்போம்என்று அறிவிக்க சிதம்பரம் தயாரா?
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் இருந்து தமிழகம் பெற்றது நிதியுதவி என்று சிதம்பரம் கூறியுள்ளார். அவைநிதியுதவி அல்ல, கடன் தான். அந்தக் கடனை வட்டியோடு தமிழக அரசு திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.
சுனாமி மறு சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் ரூ. 2,347.19 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிததார்.ஆனால், வெறும் ரூ. 679.61 கோடி தான் தமிழகத்துக்கு இதுவரை தரப்பட்டுள்ளது.
சுனாமியால் வீடுகளையும் உடமைகளையும் வாழ்வையும் இழந்தவர்களுக்கு தன்னால் உதவ முடியாது என்பதை ப.சிதம்பரம்வெளிப்படையாகவே ஒப்புக் கொள்வது நல்லது.
அரசி தருகிறோம் என்று ஒரு தாளில் எழுதித் தந்தால் மட்டும் போதாது. வீட்டுக்கு அரிசி வந்து சேர்ந்தால் தான் மக்களால் சோறுசமைக்க முடியும். சும்மா அரசின் உத்தரவுகளை மட்டும் சுட்டிக் காட்டிக் கொண்டு அறிக்கைகள் விடும் வேலையை எல்லாம்சிதம்பரம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசையே நாங்கள் தான் நடத்துகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக மத்திய அமைச்சர்கள் மழை, வெள்ளம்,சுனாமி நிவாரணத்துக்கு மாநில அரசுக்கு நிதியைப் பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திசை திருப்பும்அறிக்கைகள், பேட்டிகளை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications