சங்கரராமன் வழக்கு: ஜெயேந்திரர் வரவில்லை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணக்கு வந்தபோது ஜெயேந்திரர், விஜயேந்திரர்உள்பட 4 பேர் ஆஜராகவில்லை.சங்கரராமன் கொலை வழக்கு தற்போது புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இன்று இவ்வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர், கதிரவன், மீனாட்சி சுந்தரம் தவிர மற்ற 24 பேரும் ஆஜராகினர். அப்ரூவர்ரவிசுப்ரமணியும் ஆஜராகியிருந்தார். அப்போது தமிழக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், தமிழக அரசுவழக்கறிஞர்தான் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராக வேண்டும் என்று கோரினர்.
ஆனால் இதற்கு புதுவை வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது வருகிற 19ம் தேதிதீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நீதிபதி அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications