செங்கல்பட்டு ஏரி உடைந்து வீடுகளுக்குள் நீர்: சென்னை-திருச்சி போக்குவரத்து ஸ்தம்பிப்பு
செங்கல்பட்டு:
கன மழை காரணமாக நிரம்பி கடல் போல காணப்பட்ட செங்கல்பட்டு ஏரி இன்று அதிகாலை விஷமிகள் சிலரால்உடைக்கப்பட்டு, செங்கல்பட்டு நகர் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள ஏரி நிரம்பி கடல் போலக் காணப்பட்டது. ஏரி உடைந்த விடாமல்தடுக்க ஏராளமான மணல் மூட்டைகள் போட்டு ஏரிக் கரை பலப்படுத்தப்பட்டிருந்தது.இந் நிலையில் இன்று அதிகாலை இந்த ஏரியின் ஒரு கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல பாய்ந்தோடியது.இந்தத் தண்ணீர் செங்கல்பட்டு நகருக்குள் ஓடி நகர் முழுவதையும் வெள்ளக் காடாக்கியுள்ளது.
என்.ஜி.ஓ. காலனி, நகராட்சி காலனி, ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஏரி நீர் கடல் போலகாணப்படுகிறது.
இதுதவிர தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளம் ஓடிக் கொண்டிருப்பதால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்றவாகனங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த வாகனங்களும் செங்கல்பட்டைத் தாண்ட முடியாமல் அப்படியே ஸ்தம்பித்துநிற்கின்றன.
ஏரிக் கரையை ஆக்கிரமித்துள்ள விஷமிகள் சிலர்தான் ஏரிக் கரையை உடைத்து விட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது வீடுகளை காப்பாற்றிக் கொள்ள இந்தக் கும்பல்கள் கரையை உடைத்து விட்டுள்ளனர்.
ஏரி உடைப்பை அடைக்க அதிகாரிகள் துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீரில் மூழ்கியுள்ள ஆயிரக்கணக்கானவீடுகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications