கட்டணம் வாபஸ் இல்லை: கிரிக்கெட் வாரியம்
சென்னை:
சென்னையில் ரத்து செய்யப்பட்ட இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்காக பெறப்பட்டநுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்அளித்துள்ளது.
நவம்பர் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள்கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கன மழை மற்றும் புயலால் போட்டி நடக்கவில்லை. ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்களிடமிருந்துவசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை வாரியம் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மழை வரும் என்று தெரிந்தும் கூடகிரிக்கெட் சங்கம் போட்டியை நடத்தியது தவறு. மேலும், முன் கூட்டியே டிக்கெட் விற்பனையை மேற்கொண்டதும் தவறு.
எனவே ரத்து செய்யப்பட்ட ஆட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கிரிக்கெட் போட்டிகளுக்கான தேதியை நிர்ணயம் செய்வது இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட்வாரியமும்தான். எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதற்கு பொறுப்பேற்க முடியாது.
மேலும், 80 சதவீத டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர்தான் மழை வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.இதுதவிர, போட்டியைக் காண வசூலிக்கப்படும் தொகை திருப்பித் தர முடியாது என்று டிக்கெட்டின் பின்பக்கம் தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications