எம்ஜிஆர் பல்கலை வெடி வைத்து டமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நலைப் பல்கலைக்கழக வளாகத்தில்உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை வெளிநாடுகளில் செய்வதைப் போல வெடி வைத்துத் தகர்க்கலாமா என்று அதிகாரிகள்யோசித்து வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் கூவம் ஆற்றை அபேஸ் செய்து, எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக வளாகத்தைஉருவாக்கினார் விவர பார்ட்டியான ஏ.சி.சண்முகம்.

இந் நிலையில் சமீபத்திய மழை, வெள்ளத்தின் போது கூவம் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால் கூவம் ஆற்றின்நெடுகிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால், மழை நீர் ஆற்றில் போகாமல், ஊர்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பைஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு கூவம் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுத்தது.

அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்களை இடிக்க அதிகாரிகள் புல்டோசர்களுடன்குவிந்தனர். சுற்றுச்சுவர் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்ட நிலையில், இடிப்புக்கு பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்காலத்தடை வாங்கியது.

இதை நீக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கஜ் குமார் பன்சால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் வாதிடுகையில் கூவம் ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கல்லூரிவளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 850 மாணவர்கள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால் கல்லூரி நிர்வாகம் அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுதான் காப்பாற்றியது. மேலும், இந்தப்பல்கலைக்கழகம் கூவம் ஆற்றை முழுமையாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீர் முழுமையாக செல்ல முடியாமல், வெள்ள நீர் அனைத்தும் முகப்பேர்,திருமங்கலம், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் புகுந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 415அடி அகலம் கொண்ட கூவம் ஆற்றை இவர்கள் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டிடங்கள் காரணமாக இப்போது கூவம் ஆற்றின்அகலம் 116 அடியாக சுருங்கிப் போய் விட்டது.

இதனால்தான் கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, தண்ணீர் ஊருக்குள் புக முக்கியக் காரணமாகும். தற்போதுகட்டடங்கள் உள்ள இடம் புறம்போக்கு இடம். அங்கு வசித்துக் கொண்டிருந்தவர்களை காலி செய்து விட்டு அந்த இடத்தைவாங்கியதாக மனுதாரரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் பட்டா நிலத்தை வாங்காமல் புறம்போக்கு நிலத்தை வாங்கியதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். புறம்போக்குநிலத்தில் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு அந்த இடத்தைக் கேட்க இவர்களுக்கு உரிமை இல்லை.

கல்லூரிக் கட்டிடங்களை இடித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று இவர்கள் கூறுவதையும் ஏற்கக் கூடாது.மாணவர்களுக்கு இவர்கள் இலவசக் கல்வி அளிக்கவில்லை. கல்விக் கட்டணத்தை வசூலித்துத்தான் போதிக்கின்றனர்.

கல்வி என்ற போர்வையை வைத்துக் கொண்டு இவர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.மேலும் கூவம் ஆற்றின் வரைபடம், எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக வரைபடமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கூவம் ஆற்றின் அடையாளமே தெரியாத வகையில், கல்லூரிக்கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது தான். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர்.அதில், பிரச்சினைக்குரிய இடத்தை ஆக்கிரமித்துத்தான் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

தனது கட்டிடத்தை மட்டும் பாரபட்சமான கண்ணோட்டத்துடன் இடித்து வருவதாக மனுதாரர் கூறியிருக்கிறார். இதை அரசுதலைமை வழக்கறிஞர் மறுத்துள்ளார். அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும் என்று அவர்உறுதியளித்துள்ளார்.

இதை நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. மாணவர்களின் நலனை மட்டும் பார்க்க முடியாது, ஆயிரக்கணக்கானபொதுமக்களின் வாழ்க்கையையும் பார்க்க வேண்டியுள்ளது. சென்னையில் பெய்த மழையால் எத்ததைய பாதிப்பு ஏற்பட்டது,இன்னும் அதிலிருந்து மக்கள் மீளவில்லை என்பதை அனைவரும் அறிவர். இந்த நிலையில் கூவம் ஆற்றில் தண்ணீர் ஓடும்வழியை ஆக்கிரமித்து இத்தனைக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது.

எனவே இந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணியைத் தொடரலாம். இன்னும் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டகட்டிடங்களில் உள்ள புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நிர்வாகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தக் கட்டடங்களை ( நான்கு மாடிக் கட்டடம் மற்றும் விடுதிகள் ஆகியவை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டுள்ளன) எப்படி இடிப்பது என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவற்றை ஆட்களை வைத்துஇடித்தால் பல நாட்களாகும் என்பதால், வெளிநாடுகளில் செய்வதைப் போல சம்பந்தப்பட்ட கட்டடத்தை மட்டும்தரைமட்டமாக்கும் வகையில் நவீன ரக வெடிகளை வைத்துத் தகர்க்கலாமா என்று அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

இதுபோல செய்வதால் அருகில் உள்ள கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது, மேலும், சில வினாடிகளில் கட்டடத்தின்கதை முடிந்து விடும்.

இதற்கிடையே கூவம் ஆற்றை ஆக்கிரமித்தது, மாணவ, மாணவியரை வெள்ளத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்காதது ஆகியஇரு குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏ.சி.சண்முகத்தைக் கைது செய்யவும் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

மாணவ, மாணவியருக்கு ஜெ. உதவி:

இடிக்கப்படப் போகும் கட்டிடங்களில் முக்கியமானது மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் தான். இதன் காரணமாகஇக்கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா இவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். இடிக்கப்படப் போகும் கல்லூரி விடுதிகளில்300 மாணவர்களும், 350 மாணவிகளும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தற்காலிகமாக 250 வீடுகளை ஒதுக்க முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

முகப்பேர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்படுவர். இங்கு மாணவ, மாணவியருக்குத்தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்தஏற்பாட்டை முதல்வர் செய்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+