நில விற்பனை மெகா ஊழல்:சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு
சென்னை:
சென்னையை அடுத்த சிறுசேரியில், அரசுக்குச் சொந்தமான 103 ஏக்கர் நிலத்தை வெறும் 15 கோடி ரூபாய்க்கு சிங்கப்பூர் ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுகவின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறுசேரியில் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 103 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்குதமிழக அரசு ரூ. 15 கோடிக்கு விற்றது.ஆனால் இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேலாகும். நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்க ஆளும்தரப்பில் உள்ளோருக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சமீபத்தில் ஆளுனர் பர்னாலாவிடம் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்தலைமையிலான அக் கட்சியினர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இந் நிலையில், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், இந்த நில விற்பனை விதிமுறைகளுக்கு முரண்பாடாக நடந்துள்ளது. இந்த மோசடி விற்பனையால் தமிழக அரசுக்கு ரூ.190.55 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த நில விற்பனையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வீராசாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications