நாடாளுமன்றத்தில் திண்டாடிய இளங்கோவன்
டெல்லி:
கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொல்லத் தெரியாமல் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் இளங்கோவன்நாடாளுமன்றத்தில் அசிங்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்குக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் சொல்லி நிலைமையசமாளித்தார்.ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது இலங்கையில் இருந்து மிளகு இறக்குமதி செய்யப்படுவது குறித்து பாஜகஉறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த இளங்கோவன், இலங்கை என்று சொல்லாமல் திருப்பித் திருப்பி சிலோன் என்றே கூறினார். அப்போதுஇடைமறித்த பாஜக எம்பியான அலுவாலியா, ஒரு நாட்டின் பெயரைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாதா? அந்த நாட்டின்அதிகாரப்பூர்வப் பெயரை விட்டுவிட்டு வேறு பெயரில் சொல்வது சரியல்ல என்றார்.
அவரது கருத்தை பிற உறுப்பினர்களும் ஆதரித்தனர்.
முன்னதாக மிளகு இறக்குமதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், அது தொடர்பாகக் கொண்டு வந்தஆவணங்களில் தவறான பக்கத்தைப் பார்த்து பதில் சொன்னார். இதையடுத்து பிரணாப் முகர்ஜி தலையிட்டு அவருக்கு சரியானபக்கத்தை எடுத்துத் தந்தார்.
அப்போது பேசிய பாஜக எம்பியான முரளி மனோகர் ஜோஷி, பேசாமல் பிரணாப் முகர்ஜியே இதற்கு பதில் சொல்ல அனுமதிக்கவேண்டும் என்றார்.
ஆனால், அவைத் தலைவர் பைரோன் சிங் செகாவத் அதை ஏற்கவில்லை. பக்கத்தைப் புரட்டுவதில் இளங்கோவனுக்கு சிறியசிக்கல் எழுந்துள்ளது. அவரே இதற்குப் பதில் சொல்வார் என்றார்.
ஆனாலும் இளங்கோவன் திணறியதால், கேள்விகளுக்கு பிரணாப் முகர்ஜியே பதில்களைத் தந்தார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினரான கரன் சிங், மலைகள் நிறைந்த மாநிலங்களில் சிறப்பு பொருளாதார மையங்கள் உருவாக்குவதுகுறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளிக்க இளங்கோவன் எழுந்தபோது, அவர் சொதப்புவார் என்று நினைத்தாரோஎன்னவோ, அவரை உட்காரச் சொல்லிவிட்டு பிரணாப் முகர்ஜியே பதில் தந்தார்.


Click it and Unblock the Notifications
