ஓகேனக்கல்: மாணவர்களை சிறைபிடித்த கர்நாடக வனத்துறை
பென்னாகரம்:
ஒக்கேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஆந்திர கல்லூரி மாணவ மாணவியர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.அவர்களை தமிழக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லில் எல்லை பிரச்சினை மீண்டும் தலை தூக்கியதில் இரு மாநில அதிகாரிகளின்பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட சர்வேயில் எடத்திட்டு என்ற பகுதி தமிழகத்திற்கு சொந்தமானது என தெரிய வந்தது.கர்நாடக வனத்துறை தொடர்ந்து ஒகேனக்கல்லில் அத்துமீறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விவசாய அமைப்பினருடன்வந்து சிலர் பிரச்சினைக்குரிய பகுதியில் மண்ணை தொட்டு நெற்றியில் பூசி பரபரப்பை ஏற்படுத்தினர். இதே போல் பரிசல்களில்செல்பவர்களை மறித்து பரிசல்களை பறித்து கொள்ளும் செயலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவ மாணவிகளை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சிறை பிடித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து தீப்தி என்ற தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 102 பேர் முதல்வர்சிவசங்கர ரெட்டி தலைமையில் கல்வி சுற்றுலாவாக ஓக்கேனக்கல்லை வந்தடைந்தனர். பிறகு அவர்கள் கோத்திக்கல் பரிசல்துறையில் இருந்து காவிரியை சுற்றி பார்க்க புறப்பட்டனர்.
இவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து 15 பரிசல்களில் ஏறி சின்னபாணி, பெரிய பாணி, கூட்டாறு ஆகியவற்றின் இயற்கையை கண்டுரசித்தனர். பின்னர் கர்நாடக எல்லையில் உள்ள கொத்தகர சிலம்பு என்னுமிடத்தில் 15 பரிசல்களும் வரிசையாக சென்றுகொண்டிருந்தன.
அப்போது அவர்களை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ரேஞ்சர் பத்மநாபன், பாரஸ்டர் சின்னசாமி மற்றும் 8க்கும் மேற்பட்ட வனஅலுவலர்களும், ஊழியர்களும் தடுத்து நிறுத்தி ஒவ்வொருவரும் தலா ரூ. 20 வீதம் கட்டணம் தந்தால் தான் சுற்றிப் பார்க்கஅனுமதிப்போம் என்று தெரிவித்தனர்.
இதற்கு பரிசல் ஓட்டிகளான ஜெயவேல், பெருமாள், அய்யப்பன், பி.அய்யப்பன், சிவா, குட்டியப்பன், தேவேந்திரன், குமார்,சங்கர், ரகு, சாமிநாதன், சுப்பிரமணி, தனபால், குப்புராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணத்தை கொடுக்காமல் கரையில்இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக வனத்துறை அதிகாரிகள் கூறி பரிசல் ஓட்டிகளோடு சுற்றுலா பயணிகளையும்சிறை பிடித்தனர்.
இது குறித்து பரிசல் ஓட்டிகள் தர்மபுரி உதவி வன பாதுகாவலர் லோகநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு புகார்தெரிவித்தனர். இதன் பேரில் அவர் ஒகேனக்கல் விரைந்து வந்து அங்கிருந்து 15க்கும் மேற்பட்ட வன அலுவலர்களுடன்கர்நாடக எல்லையில் உள்ள கொத்தகர சிலம்பு என்னுடத்திற்கு சென்றார்.
பின்னர் கர்நாடக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லைக்குசுற்றுலா வருபவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் கார்நாடக வனத்துறை சார்பில் கட்டணம்வசூலிக்கப்படுவது தவறாகும் என தெரிவித்தனர்.
ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதில் கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். மேலும் சந்தனகடத்தல் வீரப்பன் நடமாட்டத்தால் இப்பகுதிக்கு வரவில்லை. தற்போது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டணம்வசூலித்து வருவதாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அதிகாரிகள் பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை அவர்களிடம் இருந்து சுமூகமாக மீட்டுஓக்கேனக்கலுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து பென்னாகரம் டிஎஸ்பி லட்சுமணசாமி மற்றும்ஒக்கேனக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த பிரச்சினையால் ஒக்கேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஆந்திர கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் மனவருந்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications