பார்வர்ட் பிளாக்கில் கார்த்திக்: சந்தானம் பக்.. பக்.. அதிமுக திக்..திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Karthik

நடிகர் கார்த்திக் தனிக் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும், அகில இந்திய அளவில் உள்ள பார்வர்ட்பிளாக் கட்சியில் சேரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் மார்க்கெட் இழந்து விட்ட நடிகர் கார்த்திக் அதிமுகவில் சேர விரும்பி விண்ணப்பம் கொடுத்தார். ஆனால்ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால், கோபமடைந்த அவர் தனது முக்குலத்தோர் பிரிவு இளைஞர்களைத்திரட்டி சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கார்த்திக்கின் சரணாலயம் அமைப்புக்கு முக்குலத்தோர் இடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அவர் போகும் இடங்களில்எல்லாம் கள்ளர், அகமுடையார், மறவர் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் பெருமளவில் கூடிவருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இவர்கள் தான் அதிமுகவின் மிக முக்கிய ஓட்டு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கார்த்திக் மீதுஅதிமுக தலைமை கடும் எரிச்சலில் உள்ளது. இந் நிலையில் தனது அமைப்பை கார்த்திக் அப்படியே கட்சியாக மாற்றத்திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அரசியல்வாதியாக மாறப் போவதாலோ என்னவோ இப்போதே பல்டி அடித்து ரிகர்சல் பார்த்துள்ளார்.

தனது தனிக் கட்சி முடிவை மாற்றிக் கொண்டு அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரதிட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிஸ்வாஸ் தலைமையில் செயல்பட்டு வரும் (பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏகப்பட்ட பிரிவுகள்உள்ளன) பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன். இந்தக் கட்சியின் மாநாடு வருகிற 16ம் தேதி கொல்கத்தாவில்தொடங்குகிறது.

மாநாட்டில் நான் கலந்துகொள்கிறேன். மாநாடு முடிந்த பிறகு, சென்னைக்குத் திரும்பி முறைப்படி கட்சியில் சேரவுள்ளேன்என்றார் கார்த்திக்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் (அதாவது தமிழக தலைமைப் பொறுப்பு) கர்த்திக்குக்கு வழங்கப்படக் கூடும்எனத் தெரிகிறது.

பார்வர்ட் பிளாக் கட்சிக்கு முக்குலத்தோர் சமூகத்தினரிடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது. தேச விடுதலையின்போதுசுபாஷ் சந்திரபோஸால் துவக்கப்பட்ட இந்த அமைப்புக்கு முழு ஆதரவைத் தெரிவித்தவர் மறைந்த முத்துராமலிங்கத் தேவர்.

தேவரின் ஆதரவு காரணமாக சுபாஷின் படைக்கு ஏகப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் கிடைத்தனர். இன்றும்கூட இச் சமூக மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தேவர் அவர்களால் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஆதரவு நிலையாக உள்ளது.

இதனால் இந்தக் கட்சியின் ஏதாவது ஒரு பிரிவை அதிமுக எப்போதும் தனது கூட்டணியில் தக்க வைப்பது வழக்கம்.

இந் நிலையில் தான் தேவர் சமுதாயத்தினருக்கு மிகவும் நெருக்கமான பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைய கார்த்திக்திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கட்சியின் சார்பில் மதுரைப் பக்கம் கார்த்திக் போட்டியிட்டால் அதிமுகவின் ஓட்டு வங்கியில் பெரிய அளவில் ஓட்டை விழவாய்ப்புள்ளது.

மேலும் தேவர் சமூகத்து விஐபிக்களான ஸ்ரீதர் வாண்டையார், டாக்டர் சேதுராமன் மற்றும் சினிமாவில் உள்ள முக்கியஸ்தர்களைதன் பக்கமாக இழுக்கவும் கார்த்திக் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

ஆனால் அதிமுகவை ஆதரிக்கும் வாண்டையாரும், திமுகவை ஆதரிக்கும் சேதுராமனும் இதுவரை கார்த்திக்குக்கு பிடிதரவில்லை.

சந்தானம் கொதிப்பு:

இதற்கிடையே கார்த்திக்கிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என யாரும்உறுதியளிக்கவில்லை என்று தற்போதைய பொதுச் செயலாளரும் எம்எல்ஏவும் அதிமுக ஜால்ராவுமான சந்தானம் எம்.எல்.ஏகூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கார்த்திக் எங்களது கட்சியில் இணைவதாக கூறியுள்ளார். நாங்களும் பரிசீலித்து அறிவிப்பதாகதெரிவித்துள்ளோம். அவர் கட்சியில் இணைவதை நான் ஆட்சேபிக்கவில்லை.

அதேசமயம், கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு தமிழ் மாநிலத் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கக் கூடாது.அது நியாயம் அல்ல. புதிதாக சேர்ந்தவர்களுக்கு உடனடியாக உயர் பதவி வழங்க கட்சி விதியில் இடமும் இல்லை.

தலைமைப் பொறுப்பை வழங்குவதாக கார்த்திக்குக்கு எந்த உறுதி மொழியையும் கட்சி வழங்கவில்லை. இதை கட்சியினர்ஏற்கவும் மாட்டார்கள் என்றார் சந்தானம்.

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சந்தானத்தை தூக்கிவிட்டு பொதுச் செயலாளர் பொறுப்பை கார்த்திக்கிடம் தர அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் தான் சந்தானம் பதைபதைக்க ஆரம்பித்துள்ளார்.

கார்த்திக்கு தலைமைப் பதவி தந்தால் அதிமுக உதவியுடன் பார்வர்ட் பிளாக் கட்சியை சந்தானம் உடைப்பார் என்று தெரிகிறது.

எப்படியோ கார்த்திக் புண்ணியத்தில் தமிழகத்தில் இன்னொரு கட்சி உதயமாவது உறுதி என்றாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+