ராகிங்: கோட்டையில் தீக்குளிக்க முயன்ற மாணவர்
சென்னை:
தன்னை ராகிங் செய்த 2 சீனியர் மாணவர்களை கைது செய்யக் கோரி சென்னையில் தலைமைச் செயலகம் முன் தற்கொலைக்குமுயன்ற மாணவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருவண்ணாமலையில் திருவள்ளூவர் பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருபவர் ராமச்சந்திரன்(வயது 21). சென்னை தலைமைச் செயலகம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்த இவரை பணியில் இருந்த போலீசார்சந்தேகப்பட்டு விசாரிக்க முயன்றனர்.உடனே அந்த மாணவர் கேனில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது கல்லூரியில் படிக்கும் 2 சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாகவும், அது தொடர்பாக கல்லூரிநிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை என்றும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும்போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனால் ராமச்சந்திரனை போலீசார் அண்ணாநகரில் உள்ள தன்னார்வு அமைப்பான ஸ்னேகா என்ற மன சிதைவு நலஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்த டாக்டர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினர்.
இதை தொடர்ந்து ராமச்சந்திரனை ராகிங் செய்த மாணவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications