சென்னை-மங்களூர் ரயிலில் வெடிகுண்டுகள்

Subscribe to Oneindia Tamil

மங்களூர்:

சென்னையிலிருந்து சென்ற மங்களூர் மெயில் ரயிலில் ஒரு கூடையில் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததை போலீசார்கண்டுபிடித்தனர்.

சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் மெயில் அந்த ரயில் நிலையத்தை நேற்று மதியம் சென்றடைந்தது. ரயில் நின்று பயணிகள்அனைவரும் இறங்கி சென்ற பின் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கம் போல் எல்லா பெட்டிகளையும் சோதனைசெய்தனர்.

இந்த சோதனையின் போது, தூங்கும் வசதியுள்ள பெட்டியில் ஒரு கூடை அனாதையாக கிடந்ததை கண்ட போலீசார் அதை திறந்துபார்த்தனர். அதில் ஒரு பெட்டியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது. உடனே போலீசார் பயணிகளை ரயில்நிலையத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றினர்.

இதற்கிடையில் மங்களூர் மாவட்ட போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டு அடங்கிய பெட்டியை பத்திரமாக போலீஸ் பயிற்சிமைதானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெட்டியில் இருந்த வெடிகுண்டுகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்தனர்.

இந்த வெடிகுண்டுகளை நக்சலைட் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். சதித்திட்டத்தில் ஈடுபட வெடிகுண்டுகளையும், ஜெலட்டின் குச்சிகளையும் கொண்டு வந்திருக்கலாம், போலீசாரின் நடமாட்டமும்,கண்காணிப்பும் தீவிரமாக இருந்ததால் ரயிலிலேயே போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

வெடிகுண்டுகள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டதா? அல்லது வழியில் கோவையில் இருந்து கடத்தப்பட்டதா?எனவும் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+